For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அழுத்தத்திற்குப் பணிந்த தாலிபான்கள்? ஆப்கனில் அரசில் ஏன் இந்த முக்கிய மாற்றம்.. பரபர தகவல்

Google Oneindia Tamil News

காபூல்: கடந்த 1996-2001 ஆட்சியைப் போல இந்த ஆட்சியில் பொது இடங்களில் வைத்த தண்டனைகள் நிறைவேற்றப்படாது என்றும் ஆப்கன் நீதிமன்றம் அறிவுறுத்தினால் மட்டுமே பொது இடங்களில் வைத்த தண்டனைகள் கொடுக்கப்படும் என்று தாலிபான் சார்பில் கூறப்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானைத் தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள், சில வாரங்களில் ஆப்கனை ஒட்டுமொத்தமாகத் தன்வசப்படுத்தியது.

பசுமைப் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் - 4 மாநில முதல்வர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் பசுமைப் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் - 4 மாநில முதல்வர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

இந்த புதிய ஆட்சி அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு ஆட்சியாக இருக்கும் என்றும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் தாலிபான்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

தாலிபான் ஆட்சி

தாலிபான் ஆட்சி

இருப்பினும், தாலிபான்கள் சொல்வது ஒன்றாகவும் செய்வது மற்றொன்றாகவுமே உள்ளது. மேலும், தாலிபான்கள் ஆட்சி அமைத்ததுமே அனைவருக்கும் அவர்களின் முந்தைய கால ஆட்சியின் கசப்பான நினைவுகளே வந்து சென்றது. தாலிபான்களின் முந்தைய ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்தது. அதில் பெண் உரிமை ஒடுக்கப்பட்டது. பெண் கல்வி, பெண்கள் வேலைக்குச் செல்வது ஆகியவை தடை செய்யப்பட்டது. மேலும், சிறு தவறு செய்பவர்களுக்கும் கூட பொது இடத்தில் குழந்தைகள் உட்பட அனைவரது முன்னிலையில் மரண தண்டனை, கசையடி போன்ற தண்டனை வழங்கப்பட்டன.

திடீர் முடிவு

திடீர் முடிவு

இந்த தாலிபான்கள் 2.o ஆட்சியிலும் எங்கு அதே நிலை தொடருமோ என்று அஞ்சப்பட்டது. அதேபோல ஆங்காங்கே சில பகுதிகளில் பொது இடங்களில் வைத்து தண்டனை நிறைவேற்றப்படுவதாகத் தகவல்களும் வெளியாகின. இந்தச் சூழலில் பொது இடங்களில் வைத்து தண்டனைகளை நிறைவேற்ற வேண்டாம் என ஆப்கன் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவை ஆப்கன் அமைச்சரவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பொது இடங்களில் இல்லை

பொது இடங்களில் இல்லை

ஒருவருக்குத் தண்டனையை பொது இடத்தில் வைத்துத் தான் நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிடாத வரை அப்படிச் செய்யத் தேவையில்லை என்று தாலிபான் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜபிஹுல்லா முஜாஹித் மேலும் கூறுகையில், "அதேநேரம் குற்றம் செய்தவர் தண்டிக்கப்படும் போது, அவர் என்ன குற்றம் செய்தார். அவர் எதற்காகத் தண்டிக்கப்படுகிறார் என்பது போன்ற தகவல்களை நாம் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் அந்த தவறை செய்ய மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

Recommended Video

    Russia-ன் அழைப்பை ஏற்ற India.. October 20-ல் Taliban உடன் பேச்சுவார்த்தை
    என்ன காரணம்

    என்ன காரணம்

    பொது இடங்களில் வைத்து தண்டனையை நிறைவேற்றும் வழக்கத்தை ஆப்கன் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகக் கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, இது மனித உரிமை மீறல் என்றும் தாலிபான்கள் இதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்திருந்தது. இல்லையென்றால், தேவையில்லாத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறியிருந்தது. இந்தச் சூழலில் தான் தாலிபான்கள் தலைமையிலான ஆப்கன் அமைச்சரவை இந்த முடிவை மாற்றியுள்ளது.

    தாலிபான்கள் ஆட்சி

    தாலிபான்கள் ஆட்சி

    கடந்த 1996-2001 வரை ஆப்கனில் தாலிபான் ஆட்சி இருந்தது. அப்போது ஆப்கன் பயங்கரவாதிகளுக்குப் புகலிடமாக மாறிப்போனது. பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆப்கனில் இருந்து செயல்படத் தொடங்கின. அப்போது தான் அல்கொய்தா அமைப்பு அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தியது. இதனால் ஆப்கனிலுள்ள பயங்கரவாதிகள் மீது போர் தொடுத்த அமெரிக்க, தாலிபான் ஆட்சியைக் கவிழ்த்தது. அதன் பின்னர் இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சியை அமைத்துள்ளன. இருப்பினும், சீனா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகள் தாலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.

    English summary
    Afghanistan govt latest announcement on Public Execution. Taliban regime in Afghan latest news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X