For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா சம்மதம்.. ரஷ்யாவில் 20ம் தேதி மீட்டிங்!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவின் அழைப்பை ஏற்று, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அக்டோபர் 20ம் தேதி இரு தரப்பும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

2 மாதங்கள் முன்பாக மொத்த ஆப்கானிஸ்தானையும் தாலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசு நடைபெற்ற வரை இந்தியா முக்கியமான கூட்டாளியாக இருந்தது. ஆனால், இப்போது தாலிபான்கள் ஆட்சி ஏற்பட்டதால் இந்தியாவுக்கு நட்பை தொடர தக்கம் ஏற்பட்டது.

சோம்நாத் கோவிலை தாக்கியவரின் நினைவிடத்தில்.. தாலிபான் திடீர் சிறப்பு மரியாதை.. இந்தியாவிடம் சீண்டல்?சோம்நாத் கோவிலை தாக்கியவரின் நினைவிடத்தில்.. தாலிபான் திடீர் சிறப்பு மரியாதை.. இந்தியாவிடம் சீண்டல்?

தலைவலி

தலைவலி

அதேநேரம், பாகிஸ்தான், சீனா ஆகியவை தாலிபான்களோடு உறவை வலுப்படுத்தின. இது இந்தியாவிற்கு தலைவலியாக உருவானது. இந்த நிலையில்தான், இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யா, தாலிபான்களுடன், இந்தியா பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. தாலிபான்களும், பேச்சுவார்த்தைக்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தனர்.

Recommended Video

    Indian Army Chief General எச்சரிக்கை | Pakistan |Jammu Kashmir |Afghanistan|Oneindia Tamil
     இந்தியா பங்கேற்பு

    இந்தியா பங்கேற்பு

    இந்திய பங்கேற்பை உறுதிசெய்த, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, அக்டோபர் 20 அன்று ஆப்கானிஸ்தான் தொடர்பாக மாஸ்கோவில் நடைபெறும் பார்மட் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இந்தியா அதில் பங்கேற்கிறது என்று தெரிவித்தார்.

    அதிகாரி யார்

    அதிகாரி யார்

    இந்த சந்திப்புக்கு வெளியுறவுத் துறை சார்பில், ஒரு இணை செயலாளர் மட்டத்திலான அதிகாரி செல்ல வாய்ப்பு உள்ளது. யாரை அனுப்புவது என்பதில், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

    ரஷ்யா ஏற்பாடு

    ரஷ்யா ஏற்பாடு

    கடந்த வாரம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆப்கானிஸ்தான் சிறப்பு பிரதிநிதி ஜமீர் கபுலோவ், அக்டோபர் 20ம் தேதியன்று ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்வதேச பேச்சுவார்த்தைக்கு தாலிபான் பிரதிநிதிகளை அழைத்துள்ளதை உறுதி செய்தார்.

    இரண்டாவது சந்திப்பு

    இரண்டாவது சந்திப்பு

    கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல், ஆகஸ்ட் மாத இறுதியில் தோஹாவில் தலிபான் பிரதிநிதிகளை சந்தித்தார், மாஸ்கோவில் நடக்கும் சந்திப்பு தாலிபான்களுடனான இரண்டாவது சந்திப்பாகும்.

    ரஷ்யாவின் உறுதி

    ரஷ்யாவின் உறுதி

    ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், சீனா, பாகிஸ்தான் தாலிபான்களுடன் நெருங்கினர். இந்த நிலையில்தான், ஆப்கனில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என்று ரஷ்யா தெரிவித்தது. மேலும் ரஷ்யா தனது தூதரகத்தை ஆப்கனிலிருந்து அகற்றவில்லை. அதேநேரம், ரஷ்யாவில் தாலிபான்கள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India has agreed to accept Russia's invitation to hold talks with the Taliban. The two sides are scheduled to hold talks in the Russian capital, Moscow, on October 20.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X