TVK: செல்வப்பெருந்தகை அவுட்.. தவெகவுடன் கைக்கோர்க்கும் காங்கிரஸ்.. பிரவீன் சக்ரவர்த்தி அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்கு தேவைப்பட்ட 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. இதனால் மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. காங்கிரஸ் - தவெக இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செல்வப்பெருந்தகை ஓரங்கட்டப்பட்டு, கிரிஷ் சோடங்கர் மூலம் இந்த டீலிங்கை முடிப்பதற்கு முயற்சி நடக்கிறதாம். இதுறித்து பிரவீன் சக்ரவர்த்தி பல தகவல்களை கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்குமா என்பதை காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சியில் சிலர், அதிலும் தமிழ்நாடு காங்கிரஸில் பெரும்பாலானோர் தேர்தலுக்கு முன்பு தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்தோம்.

Congress

எதிரிக்கு எதிரி நண்பன்

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காக அந்த முடிவில் இருந்தார்கள். கடந்த 50 வருடங்களில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு ஒரு புதிய வாய்ப்பு உருவானதாக பார்த்தோம். எங்கள் இரண்டு கட்சிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே கொள்கை தான். அவர்களின் கொள்கை எதிரி பாஜக. எங்களின் கொள்கை எதிரி பாஜக. இருவருக்கும் ஒரே எதிரி தான். எதிரிக்கு எதிரி நண்பர்கள் தானே.

கொள்கை ரீதியாக நாங்கள் ஒரே புள்ளியில் இருக்கிறோம். அது அரசியல் கூட்டணியாக மாறுமா என்பதை காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும். அதைப்பற்றி மேலிடம் பேசி முடிவு செய்வார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தோற்றுவிட்டார். அது இப்போது இல்லை. அகில இந்திய காங்கிரஸின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தான். அவர் மூலம் தான் எல்லா முடிவும் எடுப்போம்.

காங்கிரஸ் மேலிடம்

நாங்கள் ஒரு அரசியல் கட்சி. கிரிஷ் சோடங்கர் சொன்னது போல ஒன்று ஆட்சியில் எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும். இரண்டிலும் இல்லாமல் நடுவில் எப்படி இருக்க முடியும். பவரில் இருந்தால் தான் கட்சியை பலப்படுத்த முடியும். இதில் காங்கிரஸ் மேலிடம் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+