மே 7ஆம் தேதி விஜய் பதவியேற்பு? புதிய அரசு பொறுப்பேற்கும் நிலையில் தலைமைச் செயலர், டிஜிபி அவசர ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில் தலைமைச் செயலர், டி.ஜி.பி மற்றும் முக்கிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறைச் செயலர், சென்னை மாநகர காவல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து தவெகவின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின். அவர் ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். முதல்வர் ஸ்டாலினின் ராஜினாமாவை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு அமையும் வரை பதவி வகிக்குமாறு ஸ்டாலினிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
தவெக தலைமையிலான புதிய அரசு அமையவுள்ள நிலையில், பதவியேற்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
மே 8 ஆம் தேதிக்கு முன்பாக புதிய அரசு பதவியேற்க வேண்டும். அதனால் மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழாவை கலைவாணர் அரங்கு அல்லது நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று தவெக தலைவர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, பதவியேற்பு விழா தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா?












Click it and Unblock the Notifications