For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா கொடுக்கும் கிரீன் சிக்னல்.. சீனா வாலை ஒட்ட நறுக்க இந்தியா ரெடி.. தீவிரமாகும் பனிப்போர்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையே கடந்த சில நாட்களாக ஏற்பட்டு இருக்கும் மோதல் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிக்க தொடங்கி இருப்பது இந்தியாவிற்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    Nepal’s New Political Map Claims India’s Territories

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அறிவிக்கப்படாத பனிப்போர் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். இந்தியா சீனா எல்லையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை உள்ளது.

    இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இதில்தான் தற்போது அமெரிக்கா களமிறங்கி இந்தியாவிற்கு ஆதரவு அளித்து வருகிறது.

    எல்லையில் மோதல்

    எல்லையில் மோதல்

    அதன்படி சிக்கிம், அருணாசலப்பிரதேசம் எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது. ஏற்கனவே அங்கு எல்லையில் சண்டை நடந்தது. அதேபோல் லடாக் எல்லையிலும் சீனாவின் ஹெலிகாப்டர் புகுந்து அத்து மீறியது. இதனால்தான் தற்போது எல்லையில் பதற்றம் சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் நேபாளத்தை தூண்டிவிட்டு இந்தியா மீது சீனா கடுமையான அழுத்தத்தை அளித்து வருகிறது.

    இந்தியா ஆதரவு அளிக்கிறது

    இந்தியா ஆதரவு அளிக்கிறது

    இந்த நிலையில்தான் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு அளிக்க தொடங்கி உள்ளது. அதன்படி தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் தூதரக அதிகாரி ஆலிஸ் ஜி வேல்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சீனா எப்போதும் போல தனது அண்டை நாடுகள் மீது அத்து மீற தொடங்கி உள்ளது. தென் சீன கடல் எல்லையில் எப்படி சீனா அத்து மீறியதோ அதேபோல் இப்போது இந்திய எல்லையில் செய்கிறது. சீனாவின் ஆதிக்க மனோபாவத்தை இது காட்டுகிறது.

    கவனம் செலுத்துகிறது

    கவனம் செலுத்துகிறது

    சீனாவின் செயல்களை அமெரிக்கா கவனித்து வருகிறது. தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று சீனா இப்படி செயல்படுகிறது, என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்த செயல் சீனாவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. எல்லை பிரச்சனையில் சீனா மீது அமெரிக்கா கோபமாக இருப்பதும், இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பதும் புதிய திருப்பபமாக மாறி உள்ளது. இது இந்தியாவிற்கு எல்லை பிரச்சனையில் புதிய பலத்தை அளித்துள்ளது.

    என்ன கிரீன் சிக்னல்

    என்ன கிரீன் சிக்னல்

    இது ஆசியாவில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுத்த கிரீன் சிக்னலாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை எதிர்காலத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் சண்டை வந்தால் கண்டிப்பாக இந்தியாவின் பக்கம்தான் அமெரிக்கா நிற்கும். அதற்கு முக்கிய அறிகுறியாக இந்த ஆதரவு காணப்படுகிறது. அமெரிக்காவின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் இந்தியா மிக எளிதாக ராணுவ ரீதியாக, பொருளாதார ரீதியாக சீனாவை வீழ்த்த முடியும்.

    வாலை வெட்டும் இந்தியா

    வாலை வெட்டும் இந்தியா

    சீனாவின் வாலை பொருளாதார ரீதியாக இந்தியா எளிதாக வெட்ட முடியும். ஏற்கனவே சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற முடிவு செய்துள்ளது. சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் குடியேற இந்த நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளது. இதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக சீனாவை இந்தியா விரைவில் வீழ்த்தும் என்கிறார்கள்.

    சீனா கொடுக்கும் பதிலடி

    சீனா கொடுக்கும் பதிலடி

    சீனா தற்போது இதற்கு பதிலடி கொடுத்துள்ளது. அதில், அமெரிக்காவின் இந்த விமர்சனம் முட்டாள்தனமானது. இந்தியா - சீனா எல்லை பிரச்சனையில் சீனாவின் நிலைப்பாடு மாறவில்லை. நங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை. சீனா எப்போதும் தங்களின் தனி உரிமையை காத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கும் . இந்தியாவின் அத்து மீறலை எல்லையில் அனுமதிக்க மாட்டோம் என்று சீனா திமிராக கூறியுள்ளது.

    English summary
    India join hands with the USA in China's border infringement activity
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X