For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்... பின்லாந்துக்கு முதலிடம்.. பாக். விட மோசமான நிலையில் இந்தியா

Google Oneindia Tamil News

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியா 139ஆவது இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் எந்த நாட்டில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறித்த பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும். இதில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே முன்னணியில் இருக்கும்.

மமதா- உங்க ஆட்டம் முடிஞ்சிருச்சி-இனி வளர்ச்சிக்கான பணி ஆரம்பம்.. மே.வங்கத்தில் மோடி பொளேர் பிரசாரம் மமதா- உங்க ஆட்டம் முடிஞ்சிருச்சி-இனி வளர்ச்சிக்கான பணி ஆரம்பம்.. மே.வங்கத்தில் மோடி பொளேர் பிரசாரம்

அதன்படி இந்தாண்டும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கையாளப்பட்ட விதம், பொதுமக்கள் தற்போது எந்த நிலையில் உள்ளனர் என்பதையெல்லாம் ஆராய்ந்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியான நாடு

மகிழ்ச்சியான நாடு

இந்தப் பட்டியலில் ஐரோப்பிய நாடான பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாகப் பின்லாந்து முதல் இடத்தைப் பிடிப்பது குறிப்பிடத்தக்கது. பின்லாந்தைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மகிழ்ச்சி இல்லாத நாடுகள்

மகிழ்ச்சி இல்லாத நாடுகள்

இந்தப் பட்டியலில் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போர் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து ஜிம்பாப்வே, ருவாண்டா, போட்ஸ்வானா, லெசோதோ போன்ற நாடுகள் கடைசி ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன. இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடைசியில் உள்ள பெரும்பாலான நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவை.

இந்தியா எங்கே?

இந்தியா எங்கே?

149 நாடுகளை உள்ளடக்கிய இந்தப் பட்டியலில் இந்தியா 139ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா 140ஆவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 105ஆவது இடத்தையும், வங்கதேசம் 101ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோல இலங்கை 129ஆவது இடத்தையும் சீனா 84ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

உலகிலேயே மிகவும் பணக்கார நாடாக இருக்கும் போதும், அமெரிக்கா இந்தப் பட்டியல் 19ஆவது இடத்தையே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலைக் கொண்டு உலக நாடுகள் தங்கள் மக்களின் பிரச்சினையைச் சரி செய்து, அவர்கள் மகிழ்வுடன் வாழ உதவி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

English summary
World Happiness Report released, India ranks 139th Out Of 149 Countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X