For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் முதலீடு... அமெரிக்க முன்னணி நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான எளிதாக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி ஞாயிறன்று அமெரிக்காவை சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

India's growth is win-win situation for both countries: Modi at Round Table

பின்னர் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி என்பது இருநாடுகளுக்கும் நன்மை தரக் கூடியதாக இருக்கும் என்றார். மேலும் தமது ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் தொழில் தொடங்குவது என்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆகையால் வெளிநாட்டு நிறுவனங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம் என அழைப்பு விடுத்தார்.

English summary
Prime Minister Narendra Modi, who is on a two-day visit to the US, held a Round Table meeting with top US business leaders in Washington DC on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X