For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் எங்கள் கோரிக்கை.. நாங்கள் எதற்கும் தயார்.. சீனா உடனான மோதலில் இந்தியாவின் புதிய யுக்தி!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவிற்கு எதிரான லடாக் எல்லை பிரச்சனையில் இந்தியாவின் புதிய யுக்தி மற்றும் பேச்சுவார்த்தை அமைதிக்கு வழி வகுக்கும் என்கிறார்கள். அதே சமயம் இந்தியா ஏதற்கும் தயாராக இருக்கிறது என்கிறார்கள்.

இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த இரண்டு நாட்டு லெப்டினன் ஜெனரல்கள் இன்று லடாக் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இரண்டு நாட்டு எல்லை பிரச்னையை தீர்க்கும் வகையில் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்தியா சார்பாக லெப்டினன் ஜெனரல் ஹரீந்தர் சிங் எல்லைக்கு செல்கிறார். இந்தியாவின் 14வது படைப்பிரிவின் தலைவரான இவர்தான் இன்று பேச்சுவார்த்தையை நடக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

 சிக்கலான சிக்கலான "ஆபரேஷன்".. லடாக் பேச்சுவார்த்தைக்கு ஹரீந்தர் சிங்கை அனுப்பும் இந்திய ராணுவம்.. யார் இவர்?

முடிவிற்கு வரவில்லை

முடிவிற்கு வரவில்லை

இந்தியா - சீனா இரண்டு நாடுகளும் கடந்த 30 நாட்களில் வெவ்வேறு அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்திவிட்டது. லோக்கல் லெவல் அதிகாரிகள் மட்டுமே 10க்கும் அதிகமான முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதேபோல் கடந்த சனிக்கிழமை ஜெனரல் ரேங்க் கொண்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஜூன் 2ம் தேதி அதன் பின் நடந்த ஆலோசனை தோல்வியிலேயே முடிந்தது.

இப்போது தயார்

இப்போது தயார்

இந்த நிலையில்தான் இன்று லெப்டினன் ஜெனரலை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இன்று இந்த பேச்சுவார்த்தையில் முழு தீர்வு கிடைக்காது. ஆனால் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்படும். அதே சமயம் இன்று பேச்சுவார்த்தை எந்த உடன்படிக்கைக்கும் எட்டப்படாமல் போய், பிரச்சனை பெரிதாகவும் வாய்ப்பு உள்ளது. இந்தியா அனைத்து விதமான முடிவிற்கும் தயாராகவே இருக்கிறது.

உறுதி

உறுதி

சீனாவிடம் இந்தியா ஏற்கனவே தனது நிலைப்பாட்டை உறுதியாக கூறிவிட்டது. சீனா எல்லையில் புதிதாக ஆக்கிரமித்து இருக்கும் இடங்களை விட்டுவிட்டு உடனே திரும்பி சென்று விட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் கோரிக்கை. மே 5ம் தேதிக்கு முன்பு இருந்த சூழ்நிலையே நீடிக்க வேண்டும் என்பதுதானே இந்தியாவின் கோரிக்கை. ஆனால் இந்தியா இதற்காக அவசரப்படாது என்று கூறுகிறார்கள்.

4 இடங்கள் முக்கியம்

4 இடங்கள் முக்கியம்

சீனா மொத்தமாக பின் வாங்கும் வரை இந்தியா பொறுமை காக்கும். இந்தியா அதிரடியாக சண்டைக்கு செல்லாது. ராஜாங்க ரீதியாகவே இந்தியா இதை தீர்க்க முயலும் என்கிறார்கள். முக்கியமாக பாங்காங் திசோ பகுதியில் 4 இடங்களை தவிர வேறு இடங்களில் சீனா ஆக்கிரமிக்க கூடாது என்று இந்தியா இன்று கோரிக்கை வைக்கும். டோக்லாம் மோதலை 73 நாட்களுக்கு பின் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்தது போல இந்தியா இன்று தீர்க்கும் என்கிறார்கள்.

பல நாள் தொடரும்

பல நாள் தொடரும்

இப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகள் மேலும் தொடரும் என்று கூறுகிறார்கள். இந்தியா சீனாவின் எல்லையில் கல்வான் பகுதி மற்றும் பாங்காங் திசோ பகுதி வரும் 3488 கிமீ தூரத்தில் அதிக பிரச்சனைகள் நடக்கிறது. இங்குதான் 8000 வீரர்கள் வரை இரண்டு நாட்டு சார்பாக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இங்கு இரண்டு நாடுகள் சார்பாக செய்யப்பட்ட கட்டுமான பணிகள்தான் மோதலை அதிகப்படுத்தியது.

முக்கியமான சில இடம்

முக்கியமான சில இடம்

முக்கியமாக சீனா ஆக்கிரமித்து இருக்கும் கரகோம் பாஸ், சிப் சிப் நதி, ட்ரிக் ஹைட்ஸ், ஹாட் ஸ்பிரிங்ஸ், கல்வான், டெஸ்பங் பிளைன்ஸ் ஆகிய பகுதிகள் இந்த பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் பெறும் என்கிறார்கள். இந்திய இதற்கு முன் நடந்த பேச்சுவார்த்தையிலேயே சீனா விடம் இதுகுறித்து கூறிவிட்டது. இன்றும் இந்த விஷயங்கள் குறித்து இந்தியா அழுத்தமாக கருத்து தெரிவிக்கும் என்கிறார்கள்.

ராஜாங்க நகர்வு

ராஜாங்க நகர்வு

இந்தியா எல்லை பிரச்சனையில் ராஜாங்க ரீதியாக காய்களை நகர்த்தி வருகிறது. பல உலக நாடுகளின் ஆதரவை இந்தியா ஏற்கனவே பெற்றுவிட்டது. இன்று ஆலோசனையில் சீனாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தியாவால் கண்டிப்பாக பேச முடியும், இந்தியாவின் இந்த தீவிரமான ராஜாங்க யுக்தி கண்டிப்பாக எல்லை பிரச்சனையை தீர்க்கும் என்கிறார்கள்.

English summary
India's new realist approach against China in Ladakh Standoff may bring peace.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X