For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை குறித்து அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வருத்தம்!

அமெரிக்காவில் மூன்று வயது இந்தியச் சிறுமி மாயம். ட்விட்டரில் அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெக்சாஸ்: இந்தியாவில் இருந்து அமெரிக்க தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்பட்ட குழந்தை மாயமானது தொடர்பாக ட்விட்டரில் மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் வருத்தம் தெரிவித்தார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் வெஸ்லி மேத்யூஸ். இவரது வளர்ப்பு மகள் ஷெரின் மேத்யூஸ். இந்த சிறுமிக்கு வயது மூன்று.

Indian child missing in Texas : Sushma shared her concern in Twitter

கடந்த சனிக்கிழமை அன்று பால் குடிக்க மறுத்ததால் இவரது தந்தை இவரை வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருக்கிறார். வீட்டிற்கு உள்ளே சென்று வருவதற்குள் குழந்தையைக் காணவில்லை.

இதனால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. காணாமல் போன ஷெரீன் மேத்யூஸ் இந்தியக் குழந்தை. குழந்தைகள் இல்லாத அமெரிக்கத் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஒரு தொண்டு நிறுவனம் மூலம், பிகாரின் நாளந்தா பகுதியில் இருந்து தத்துக்கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். அந்தக் குழந்தையைக் காப்பாற்ற தூதரக அதிகாரிகளும் அமெரிக்க போலீஸோடு இணைந்து செயல்படுவார்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

English summary
Adopted girl child from india missing in US. External affirs minister sushma swaraj shares her concern in twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X