'புளிமியாவால்' அவதிப்பட்ட மிஸ் அமெரிக்கா நினா: 30 கிலோ வரை எடைகுறைப்பு
நியூயார்க்: மிஸ் அமெரிக்கா அழகிப் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்ணான நினா கிட்டத்தட்ட 30 கிலோ எடையை குறைத்துள்ளாராம்.
மிஸ் நியூயார்க் அழகிப் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண் நினா தவுலுரி(24). அவர் மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை நினா பெற்றுள்ளார்.
தனது தந்தை சீமாந்திராவைச் சேர்ந்த தவுலுரி தன கோட்டேஸ்வர சவுத்ரி போன்றே மருத்துவராக விரும்புகிறார் நினா.

உடல் பருமன்
மிஸ் அமெரிக்கா நினாவுக்கு உடல் பருமன் பிரச்சனை இருந்துள்ளது.

புளிமியா
நினா புளிமியாவால் அவதிப்பட்டுள்ளார். புளிமியா என்றால் கண்டபடி சாப்பிட்டுவிட்டு உடல் எடை கூடிவிடுமே என்று நினைத்து அதை வாந்தி எடுப்பது தான்.

30 கிலோ வரை
குண்டாக இருந்த நினா சுமார் 30 கிலோ வரை குறைத்துள்ளார். அவருக்கு ஒல்லிக்குச்சி என்ற வார்த்தை கூட பிடிக்காதாம். குண்டாக இருக்கும் பெண்கள் தன்னைப் போன்று ஸ்லிம்மாக முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தாய் மொழி
நினா அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் தனது தாய்மொழியான தெலுங்கை மறக்கவில்லை. தெலுங்கில் சரளமாக பேசுவாராம்.












Click it and Unblock the Notifications