”கோமள விலாஸ்” ஸ்பெஷல் தோசையை ரசித்து சாப்பிட்ட பிரதமர் மோடி- டுவிட்டரில் நன்றி!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவிலுள்ள கோமள விலாஸ் உணவகத்தில் இந்திய உணவைப் பிரதமர் லீயுடன் ருசித்துச் சாப்பிட்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ஷாங்ரிலா ஓட்டலில் உரையாற்றிய பிறகு சிங்கப்பூர் பிரதமர் லீயுடன் கோமள விலாசுக்கு சென்றார்.
பின்பு அங்கு அந்த ஹோட்டலின் பிரபலமான தமிழக தோசையையும், வடையையும் சுவைத்து சாப்பிட்டார். சுவையான உணவு அளித்ததற்காக தனது நன்றிகளை டுவிட்டரிலும் பகிர்ந்து கொண்டுள்ளார் மோடி.
சிங்கப்பூரின் முன்னோடி உணவகங்களில் ஒன்றாகத் திகழும் கோமள விலாஸ் சைவ உணவுக்கு உள்ளூர் வாசிகளும், சுற்றுப்பயணிகளும் தேடி வரும் இடங்களில் ஒன்று.

முருகையா ராஜூ:
இட்லி, தோசை, சாத வகைகளை மட்டும் விற்று வந்த இவ்வுணவகத்தை பிரபல உணவகமாக உயர்த்தியவர் திரு முருகையா ராஜு.

துப்புரவு தொழிலாளர்:
நான்கு சகோதரர்கள் ஒரு சகோதரி என பெரிய குடும்பத்தில் பிறந்த திரு ராஜு 15 வயதில் பிழைப்பு தேடி 1937ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வந்தார். "கருணானந்த விலாஸ்" என அழைக்கப்பட்ட உணவகத்தில் துப்புரவுத் தொழிலாளராக அவர் வேலை செய்யத் தொடங்கினார்.

உணவுத்துறையில் முத்திரை:
அதன்பின்னர் அவரது மகன் தனசேகருடன் இணைந்து ஒரு சிறிய உணவகத்தினை துவங்கினார். "கோமளாஸ்" என்ற பெயரில் விரைவு உணவகத்தை 1995ஆம் ஆண்டு தொடங்கிய தனசேகரன் முதல் சைவ இந்திய விரைவு உணவகத்தை அறிமுகப்படுத்தி தனக்கென உணவகத் துறையில் முத்திரை பதித்தார். தொடக்கத்தில் 13 கிளைகளுடன் தொடங்கிய உணவகம் இன்று பத்து கிளைகளுடன் செயல்படுகிறது.

இந்திய உணவுகள்:
தற்போது இந்த ஹோட்டலை அவரது பேரனான ராஜ்குமார் நிர்வாகித்து வருகின்றார். அங்கு உணவருந்திய பிரதமர் மோடி, இந்திய உணவுகளான இட்லி, வடை, தோசையை ரசித்து உண்டார்.
|
மசால் தோசையும், வெங்காய தோசையும்:
"முதலில் சாதாரண தோசை மட்டுமே உண்ண நினைத்த மோடி அவர்களும், லீ அவர்களும் பின்னர் மசால் மற்றும் வெங்காய தோசையும் ஆர்டர் செய்து சாப்பிட்டனர்" என்று ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

பெருமை எங்களுக்கே:
அதன் பின்னர் அனைத்து ஊழியர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. "இதனால் ஒரு இந்தியப் பிரதமரே எங்கள் கடையில் சாப்பிட்ட பெருமையை பெற்றுள்ளோம்" என்று ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications