இந்தோனேசியா: அதிகாலையில் மக்களை அலற வைத்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் வாபஸ்!
ஜகார்தா : இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவானது. இதனையடுத்து, இந்தோனேசியா நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் மக்கள் மத்தியில் பயங்கரமான பீதி ஏற்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். அதன்படி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேறினர். எனினும், இரண்டு மணி நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பூமியின் வெவ்வேறு அடுக்குகள் அடிக்கடி சந்திக்கும் புவியியல் அமைவிடம் காரணமாக அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று இந்தோனேசியாவில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் நேற்று அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.
அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையிலும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே நள்ளிரவு 1.30 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7ஆகப் பதிவாகியுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்கா அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. டாக்காவிலிருந்து 21 கி.மீ தொலைவில் நள்ளிரவு 1.45 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4ஆகப் பதிவாகி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications