உலக நாடுகளே எதிர்பார்த்திருக்காது! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! ஈரான் சர்ப்ரைஸ்
டெஹ்ரான்: இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்த நிலையில், காமெனி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று இந்த போரில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும்.. அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்பார்க்காத மிகப்பெரிய அதிர்ச்சி தரும் சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு காமெனி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அச்சுறுத்தியதையடுத்து, ஈரான் உயரிய தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், "போர் தொடங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனத்தின் மொழிபெயர்ப்பின்படி, அயோத்துல்லா அலி காமெனி தனது பதிவில் "அலி கைபாருக்குத் திரும்புகிறார்" என்று கூறி உள்ளார். அதவாது யூத நகரமான கைபாரை கைப்பற்றிய இஸ்லாமிய வரலாற்றை குறிக்கும் விதமாக அவர் இந்த போஸ்டை செய்துள்ளது. இது ஷியா இஸ்லாத்தின் முதல் இமாம்படி 7-ம் நூற்றாண்டில் யூத நகரமான கைபாரைக் இஸ்லாமியர்கள் கைப்பற்றியதைக் குறிக்கும் விதமாக அவர் இந்த போஸ்டை செய்துள்ளது.
அந்தப் பதிவில், ஒரு நபர் கையில் வாளுடன் கோட்டை போன்ற வாயிலுக்குள் நுழைவது போன்றும், வானத்தில் தீப்பிழம்புகள் தெரிவது போன்றும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், சில நிமிடங்களுக்குப் பிறகு, காமெனி இஸ்ரேலுக்கு மற்றொரு எச்சரிக்கை விடுத்தார். அதில், "பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு நாம் ஒரு வலுவான பதிலடியைக் கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாம் கருணை காட்ட மாட்டோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இஸ்ரேல் - ஈரான் மோதல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை நிபந்தனையின்றி சரணடையுமாறு அழைப்பு விடுத்த போதிலும், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று இந்த போரில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும்.. அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்பார்க்காத மிகப்பெரிய அதிர்ச்சி தரும் சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதை உலக நாடுகளே எதிர்பார்த்து இருக்காது என்று ஈரான் கூறி உள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் ஆறாவது நாளாக நீடித்து வருகிறது. புதன்கிழமை அதிகாலையில் முதல் இரண்டு மணி நேரத்தில் இஸ்ரேலை நோக்கி ஈரான் இரண்டு முறை ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் டெல் அவிவ் நகரில் வெடிச்சத்தம் கேட்டது.
இதற்கிடையில், டிரம்ப் ஜி7 மாநாட்டிலிருந்து முன்னதாகவே புறப்பட்டு வந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 90 நிமிடங்கள் கலந்துரையாடினார். மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவே ஈரான் வான்வெளியை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது என்று டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மேலும் "ஈரானிடம் நல்ல வான் கண்காணிப்பு கருவிகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் நிறைய உள்ளன. ஆனால் அது அமெரிக்க தயாரிப்புக்கு ஈடாகாது. அமெரிக்காவை விட யாரும் சிறப்பாகச் செய்ய முடியாது.."இப்போதைக்கு" ஈரான் தலைவரை கொல்லும் எண்ணம் இல்லை.. ஆனால் ஈரானின் அதி உயரிய தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எங்கே பதுங்கியிருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியும் என்று ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
-
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications