மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. டெல்டா வைரஸால் 5-வது அலை அபாயம்.. அச்சத்தில் ஈரான்
தெஹ்ரான் : ஈரானில் டெல்டா வைரஸ் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் ஈரானில் கொரோனா தொற்றுநோயினால் ஐந்தாவது அலை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி அச்சம் தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் புதிது புதிதாக உருமாற்றம் அடைந்துள்ளது. பிரிட்டனில் பி.1.1.7 வகை கொரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பி.1.351 வகை வைரஸ்கள், பிரேசிலில் பி.1. வகை வைரஸ்கள் தொற்றுப் பரவல் வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. இதேபோல் தான்
இந்தியாவில் முதல்முதலாக கண்டறியப்பட்டதாக கருதப்படும் டெல்டா உருமாற்ற வைரஸ் தற்போது 96 நாடுகளில் பரவி இருக்கிறது.

இந்நிலையில் ஈரானில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக அரபு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், "ஈரானின் தென்பகுதி மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. டெல்டா வைரஸ் காரணமாக ஈரானில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஈரான் ஐந்தாவது அலையை எதிர்கொள்ள வேண்டியதிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி இதுபற்றி வைரஸ் தடுப்பு பணிக்குழுவின் கூட்டத்தில் கவலையுடன் கூறும் போது,. ஈரான் முழுவதும் ஐந்தாவது அலையால் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறோம். தெற்கு மாகாணங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவியுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்.
ஈரான் சுகாதார அமைச்சகம் இதை அபாயகரமானதாக வகைப்படுத்தி உள்ளது. ஈரானில் பரவி உள்ள கொரோனா வைரஸ் மிக ஆபத்தான வைரஸ் ஆகும். தலைநகர் தெஹ்ரான் மற்றும் தெஹ்ரான் மாகாணத்தின் ஒன்பது நகரங்களிலும் டெல்டா பிளஸ் வைரஸ் பரவி உள்ளது.
Recommended Video
ஈரானில் தடுப்பூசிகளைச் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள மந்த நிலைதான் தொற்று மீண்டும் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. அரபு நாடுகளில் கொரோனாவால் மோசமாக பாதிப்படைந்த நாடாக ஈரான் உள்ளது, ஈரானில் இதுவரை கொரோனாவுக்கு 80,000 பேர் பலியாகி உள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications