பாகிஸ்தான் பக்கம் சுற்றும் ஈரான் விமானம்.. 48 மணிநேரத்தில் 3வது முறை.. பரபரப்பான இஸ்லாமாபாத்!
அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் தற்போது மிகவும் இக்கட்டான கட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் நேரடி போருக்கு செல்லாமல், பொறுமையை சோதித்து வரும் "போரும் இல்லை, அமைதியும் இல்லை" (No War, No Peace) என்ற நிலையில் உள்ளன.
இதேவேளையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போர் தாக்குதல் மீண்டும் தொடர்வதை தடுக்கும் நோக்கில் பல நாடுகளுக்கு தொடர்ச்சியான பயணங்களை மேற்கொண்டு, அமைதிக்கான வழிகளையும், போர் உருவானால் ஈரானுக்கான ஆதரவையும் தேடி வருகிறார்.

பாகிஸ்தானுக்கு 3வது முறை
அப்பாஸ் அராக்சியின் இன்றைய பாகிஸ்தான் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று செவ்வாய்க்கிழமை அவர் இஸ்லாமாபாத் சென்றது, கடந்த 48 மணி நேரத்தில் மூன்றாவது முறையாகும். முதல் 2 முறையும் அமெரிக்க அதிகாரிகள் சந்திக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்த நிலையில் 3வது முறையாக பாகிஸ்தான் வந்துள்ளார்.
இதேவேளையில் பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கு கடந்த 48 மணிநேரத்தில் போரை முடித்துக்கொள்ளவும், அமைதி திரும்ப ஒப்பந்தம் செய்யவும் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளது. இதுக்குறித்து அமெரிக்காவுக்கு பாகிஸ்தானுக்கு பதில் அளித்து வரும் வேளையில், அப்பாஸ் அராக்சியின் இன்றைய இஸ்லாமாபாத் பயணம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
பாகிஸ்தான் தற்போது ஈரான் - அமெரிக்கா இடையே முக்கிய மத்தியஸ்தராக செயல்படுவது உலக நாடுகள் மத்தியில் இந்நாட்டின் மீதான பிம்பத்தை மாற்றி வருகிறது. நேரடி பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் மூலம் தகவல் பரிமாற்றங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஈரான் திட்டம்
ஈரான் தற்போது அமெரிக்காவுக்கு ஒரு புதிய அமைதித் திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் அணு ஆயுதங்கள், அணு சக்தி மற்றும் யுரேனியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை பிற்காலத்திற்கு ஒத்திவைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக ஹார்முஸ் நீரிணையை உடனடியாக திறப்பது மற்றும் போரை நிறுத்துவது ஆகிய முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. இந்த அணுகுமுறை பேச்சுவார்த்தையை சுமூகமாக முன்னெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுக்குறித்து அமெரிக்க தரப்பின் பதிலை விவாதிக்கவே அப்பாஸ் அராக்சி 3வது முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவுடன் முக்கிய சந்திப்பு
பாகிஸ்தான் செல்லும் முன்பு அராக்சி ரஷ்யாவுக்கு சென்று அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு 90 நிமிடங்கள் நடந்தது. "போர் மற்றும் ஆக்கிரமிப்பு" தொடர்பான விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். ஈரான்-ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலும் இந்தப் பேச்சுவார்த்தை அமைந்தது எனவும் தெரிவிதார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் இந்த பயணங்கள் வெள்ளிக்கிழமை இரவு துவங்கியது. முதல் ஸ்டாப் பாகிஸ்தான், அதன் பின்பு ஓமான், இதை தொடர்ந்து ரஷ்யா என ஈரான் தனது நட்பு நாடுகளுடன் உறவை மேம்படுத்த தொடர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
-
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications