ஈரானிடம் ஏவுகணைகள் இல்லையா! இஸ்ரேல் தாக்குதலுக்கு.. ட்ரோன் மூலம் பதிலடி ஏன்? பின்னால் உள்ள காரணம்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரான் நாட்டின் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. பதிலடி நடவடிக்கையாக ஈரான் சில ட்ரோன்களை அனுப்பி வைத்திருக்கிறது. ஏன் ஈரானிடம் ஏவுகணைகள் இல்லையா? ட்ரோன் பதிலடி ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் ஈரானின் திட்டம் வேறு என்று சொல்லப்படுகிறது.

ஈரான் வசம் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் இருக்கின்றன. ஆனால், அதை ஏன் இன்னும் அந்நாடு பயன்படுத்தவில்லை என்கிற கேள்விக்கான பதில் கொஞ்சம் சிக்கலானது. காரணம் ஈரான் அதிபர் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்.

Iran Israel Middle East

சமீப நாட்களாக ஈரான்-அமெரிக்கா இடையே அணு சக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், இறுதி முடிவு என எதுவும் எட்டப்படவில்லை. காரணம் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தாலும், அணுசக்தி விஷயத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய ஈரானின் உச்ச தலைவர் என்று சொல்லப்படும் 'அயத்துல்லா சையத் அலி ஹுசைனி காமெனி', பிடி கொடுக்க மறுத்து விட்டதுதான்.

ஆக, அரசு ஒரு பக்கமும், அரசாங்கம் ஒரு பக்கமும் இருக்கிறது. இரண்டும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஈரானால் உறுதியான முடிவை எடுக்க முடியும். போர் விஷயத்திலும் அந்நாட்டு உச்ச தலைவர், ரஷ்யாவின் ஆதரவை நம்பி வருகிறார். மட்டுமல்லாது சர்வதேச அரங்கில் அமெரிக்கா, இஸ்ரேலின் நிலைப்பாட்டை விளக்கி, மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்று விரும்புகிறார். மறுபுறம் அந்நாட்டு அதிபரின் ஆதரவாளர்கள், இஸ்ரேல் மீது உடனடியாக போரை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் ஆதரவை பெற்றுவிட்டால், இதுபோன்ற தாக்குதல்கள் நடக்க வாய்ப்பே இல்லாமல் போகும். ரஷ்யா பலமான அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது. இதை கொண்டு தனது ஆதரவு நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. ஆர்மீனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு ரஷ்யா அணு ஆயுத பாதுகாப்பு வழங்கி வருகிறது.

இந்த நாடுகளை வேறு நாடுகள் தாக்கினால், அது ரஷ்யா மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும். எனவே மற்ற நாடுகள் இந்நாடுகளை தாக்க அஞ்சும். அப்படியான ஒரு பாதுகாப்பு கட்டமைப்பு ஈரானுக்கும் தேவைப்படுகிறது. அதற்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள்தான் துருப்பு சீட்டு. ஆகவேத்தான் தன்னை பாவப்பட்ட ஒரு நாடாக காட்டிக்கொள்ள ஈரான் முயல்கிறது. எனவேதான் உடனடியாக தாக்குதல்களை நடத்தவில்லை என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள ஈரான், மக்களின் ஆதரவையும் பெற வேண்டும். இருக்கும் ஆயுதங்களை கண்மூடித்தனமாக பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், சர்வதேச அரங்கில் ஈரான் தலைகுணிந்துதான் நிற்க வேண்டும். எனவேதான் தாக்குதலை தாமதப்படுத்தி வருகிறது. சர்வதேச அரங்கில் ஆதரவும் எதிர்ப்பும் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துதான் ஈரான் காய் நகர்த்தும். சுருக்கமாக சொல்வதெனில் மக்கள் நம்பிக்கையை பெற்று தாக்குதல் நடத்த ஈரான் ரெடியாகி வருகிறது.

இது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+