• search

‘புளூட்டோவைத் திரும்ப கோள் என அறிவியுங்கள்’... 6 வயது சிறுமியின் கோரிக்கைக்கு நாசா பதில்!

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  டப்ளின்: புளூட்டோவை மீண்டும் சூரிய குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என்ற அயர்லாந்து சிறுமியின் கடிதத்திற்கு நாசாவின் கோள்கள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கிரீன் பதில் எழுதியுள்ளார்.

  12 ஆண்டுகளுக்கு முன்வரை நமது சூரியக் குடும்பத்தில் 9 கோள்கள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. 9வது கோளாக 1930ம் ஆண்டு நெப்டியூனுக்கு அடுத்ததாக ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க வானியல் அறிஞர் கிளைட் டோம்பா கண்டுபிடித்த இந்தக் கோளுக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த வெனிடியா என்ற 11 வயது சிறுமி புளூட்டோ என்ற கிரேக்க கடவுளின் பெயரை தனது தாத்தா மூலம் பரிந்துரைத்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து 9வது கோளுக்கு புளூட்டோ என விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.

  ஆனால், கடந்த 2006ம் ஆண்டு சூரியக் குடும்பத்தின் கடைசிக் கோளான புளூட்டோ ஒரு கோள் அல்ல, அது 'குறுங்கோள்' அல்லது 'குள்ளக்கோள்'(Dwarf Planet) என விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டது. ஏனெனில், 8வது கோளாக சுற்றி வரும் நெப்டியூனின் சுற்றுவட்டப் பாதையில் புளூட்டோ குறுக்கிடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். இதன் காரணமாக பூமியின் நிலவான சந்திரனைவிட அளவில் சிறிய புளூட்டோ, கோள் அந்தஸ்தை இழந்தது.

  சூரியக் குடும்பத்தின் கடைக்குட்டியாக இருந்த புளூட்டோ பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் நிறைய உள்ளன. தொடர்ந்து அது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மீண்டும் புளூட்டோவிற்கு கோள் அந்தஸ்தை மீண்டும் தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  இந்த சூழ்நிலையில் தான், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி காரா லூசி ஓ கான்னரும் நாசாவிற்கு இதே கோரிக்கையை முன்வைத்து கடிதம் ஒன்றை எழுதினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் நாசாவுக்கு அந்த கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தற்போது அந்தக் கடிதத்திற்கு நாசாவின் கோள்கள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கிரீன் பதில் எழுதியுள்ளார். இதனால் காரா பிரபலமாகியுள்ளார்.

  நான் கேட்ட பாடல்:

  நான் கேட்ட பாடல்:

  காரா தனது ஆசிரியரின் உதவியுடன் நாசா விண்வெளி மையத்துக்கு அந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். அதில், " நான் கேட்ட ஒரு பாடலின் முடிவில், புளூட்டோவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று இருந்தது. அது நிறைவேற வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.

  முக்கியக் கோள் புளூட்டோ:

  முக்கியக் கோள் புளூட்டோ:

  மெர்குரி, வீனஸ், பூமி, செவ்வாய், ஜூப்பிட்டர், சனி, யுரானஸ் மற்றும் நெப்ட்யூன் போன்று, புளூட்டோவும் முக்கிய கோளாக இருக்க வேண்டும். ஏனென்றால், நான் பார்த்த ஒரு வீடியோவில், கடைசி கோளாக இருக்கும் புளூட்டோவை நாம் சென்று பார்ப்போம் என்று சொல்லப்பட்டது. மற்றொரு வீடியோவில், பூமியால் புளூட்டோ குப்பையில் போடப்பட்டது என இருந்தது. எந்தவொரு கோளும் குப்பையில் போடப்படக்கூடாது" என காரா எழுதியிருந்தார்.

  வசீகரமான இடம் தான்:

  வசீகரமான இடம் தான்:

  இந்த ஆறு வயது சிறுமியின் கடிதத்தால் கவரப்பட்டு, அதை மதித்து, அவருக்கு பதில் கடிதம் எழுதியிருக்கிறார் நாசாவின் கோள்கள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கிரீன். அதில் அவர், " நான் உனது கருத்துடன் ஒத்துபோகிறேன். உண்மையில் புளூட்டோ ஒரு குளிர்ச்சியான கோள்தான். புளூட்டோவுக்கு இதயம் இருக்கக்கூடும் என்பது கூட சிலரின் நம்பிக்கை. இந்த உலகம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். என்னை பொருத்தவரை புளூட்டோ ஒரு சிறிய கோளா இல்லையா என்பது முக்கியமல்ல. புளூட்டோ ஒரு வசீகரமான இடம். அது பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

  நம்பிக்கை:

  நம்பிக்கை:

  நீ பெரியவாளாகி ஒரு புதிய கோளை கண்டுபிடிப்பாய் என நம்புகிறேன். நீ நன்றாக படித்து, பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், நாசாவில் உன்னை சந்திப்பதற்காக நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் " எனத் தெரிவித்திருந்தார்.

  யூனிகார்ன்:

  யூனிகார்ன்:

  ஒரு புதிய கோளை கண்டுபிடித்து அதற்கு பிளானட் யூனிகார்ன் என பெயர் வைப்பேன் என அடிக்கடி சொல்லும் சிறுமி காரா, தமது ஆசிரியர்களிடம் விண்வெளி தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்பதுண்டாம். "காரா ஒரு அதிபுத்திசாலி. அவள் கேட்கும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது மிகவும் கடினம் . அவளுக்கு எப்போதுமே தொலைதூரத்தில் இருக்கும் பொருட்களின் மீது தான் ஆர்வம் அதிகம்", என்கிறார் அவளது ஆசிரியை சாரா ஓ டோனோவான்.

  பாடல்கள் தான் காரணம்:

  பாடல்கள் தான் காரணம்:

  கடந்த ஆண்டில் இருந்துதான் காராவுக்கு விண்வெளி தொடர்பான அறிவியல் படிப்பின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. புளூட்டோ பற்றிய பாடல்கள் மற்றும் வீடியோக்கள் காராவின் விண்வெளி ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன. ஒருநாள் இதுபோன்று வீடியோ பார்த்துக்கொண்டிருந்த போதுதான், நாசாவுக்கு கடிதம் எழுத வேண்டும் என அசிரியை சாராவிடன் கேட்டுள்ளாள் காரா.

  கடிதம் எழுதிய ஆசிரியை:

  கடிதம் எழுதிய ஆசிரியை:

  கடிதம் எழுதும் அளவுக்கு இன்னும் தேர்ச்சி பெறாததால், அவளின் வார்த்தைகளை ஆசிரியை எழுதியுள்ளார். காரா எழுதச் சொன்ன சில விஷயங்கள், சரியானதுதானா என கூகுளில் தேடிப்பார்த்து உறுதி செய்துக்கொண்டிருக்கிறார் ஆசிரியை சாரா. சிறுமி சொன்ன விஷயங்கள் அனைத்தும் சரியானதாக இருந்ததால், அவர் ஆச்சர்யம் அடைந்து இந்தக் கடிதத்தை எழுதியதாகக் கூறுகிறார்.

  முதல்கட்ட ஆசை:

  முதல்கட்ட ஆசை:

  விண்வெளி ஆராய்ச்சியாளராகி நாசாவில் சேர்ந்து, புளூட்டோ உள்ளிட்ட அனைத்து முக்கிய கோள்களுக்கும் சென்று வர வேண்டும் என்பது தான் தமது ஆசை என்கிறார் காரா. ஆனால் அதற்கு இன்னும் நிறைய காலம் இருப்பதால், இடைப்பட்ட நேரத்தில் புளூட்டோவை முக்கிய கோள்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

  புளூட்டோ மீண்டும் கோள்கள் பட்டியலில் சேர்க்கப்படுகிறதோ இல்லையோ, இப்போதைக்கு நாசாவிடம் இருந்து பதில் கடிதம் வந்துள்ளதால், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார் காரா.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  Pluto used to be one of the nine planets in the solar system, and it isn't anymore. That's not right, said the little girl from Ireland. So Cara, with the help of her teacher, wrote a letter to NASA hoping to persuade the space agency to

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more