ஈரானில் அதிகார சண்டை..? மூத்த தலைவர்களை ஓரம்கட்டம் IRGC மேஜர் ஜெனரல்.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய புரட்சிக் பாதுகாப்பு படையின் (IRGC) கமாண்டர் மேஜர் ஜெனரல் அஹ்மத் வஹிதியும் அவரது தலைமையிலான முக்கிய குழுவும், கடந்த 48 மணி நேரத்தில் ஈரானின் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமின்றி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் தற்காலிகமாக கட்டுப்படுத்தி வருவதாக போர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றம், ஈரானின் அரசியல் தலைவர்களுக்கு இருந்த பேச்சுவார்த்தை அதிகாரத்தை IRGC பக்கம் திருப்பியுள்ளது. இதனால் ஈரான் அரசியலில் புதிய குழப்பமும், அதிகார சண்டையும் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

iran war US Trump IRGC Power Grab Iran Ahmad Vahidi US Negotiations Strait of Hormuz Blockade April 2026 Iran Military Control Shift US Navy Iran Port Blockade IRGC IRGC Commander Ahmad Vahidi Iran power shift 2026 Strait of Hormuz blocked April 18 IRGC Navy attacks commercial ships Iran rejects US negotiations Institute for the Study of War Iran US Navy blockade Iranian ports Hormuz Strait crisis latest Vahidi controls Iran talks IRGC sidelines Iranian diplomats oil prices rise Hormuz blockade Iran US conflict update IRGC takes over negotiations Tehran internal power struggle US CENTCOM forces ships back IRGC IRGC IRGC IRGC

IRGC-யின் திடீர் அதிகாரம்

IRGC தளபதி வஹிதியும் அவரது தலைமையிலான குழுவும், ஈரான் போரின் தொடக்கத்தில் இருந்தே பேச்சுவார்த்தை செயல்முறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக தெரிகிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சமீபத்திய அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைகளிலும் IRGC தனது மேற்பார்வையின் கீழ் செயல்பட வலியுறுத்த முயன்றது. பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் IRGC-யின் செல்வாக்கு ஈரான் அரசியலில் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது என Institute for the Study of War அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு ஏற்றார் போல் IRGC கடற்படை சர்வதேச கடற்படை தொலைத்தொடர்பு தளமான சேனல் 16ல் ஹார்முஸ் மூடப்பட்டு உள்ளது. இதை திறக்க வேண்டும் என்றால் எங்களுடைய தலைவர் ஈமாம் காமெனி சொல்ல வேண்டும், யாரோ ஒரு மூட்டாள் டிவீட் போட்டால் திறக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளது. இதில் முட்டாள் என குறிப்பிட்டத்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி-ஐ தான்.

இதனால், தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஈரான் அரசியல் அதிகாரிகளுக்கு சொந்தமாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்பது தெளிவாகிறது. அமெரிக்கா இதுவரை பேச்சுவார்த்தை நடத்திய முக்கிய தலைவர்களையும் IRGC ஓரங்கட்டியுள்ளது. இந்த நிலை, ஈரானின் அரசியலில் பிளவு ஏற்பட்டு உள்ளதாகவும், IRGC-யின் ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ளது தெரிகிறது.

IRGC தாக்குதல்

நேற்று அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி IRGC கடற்படை பல வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதே நாளில், எந்தக் கப்பலும் ஹார்முஸ் நீரிணையில் செல்ல அனுமதிக்கப்படாது என IRGC அறிவித்தது. இது, ஏப்ரல் 17 அன்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெளியிட்ட வணிகப் போக்குவரத்துக்கு ஹார்முஸ் நீரிணை முழுமையாகத் திறந்துள்ளது என்ற அறிவிப்புக்கு எதிரான நிலைப்பாடு.

இதேவேளையில் அமெரிக்கா அரசு, ஈரான் உடன் 100 சதவீதம் அமைதி ஒப்பந்தம் முடியும் வரையில் தனது கடற்படை முடக்கத்தை நீக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்க கடற்படை ஈரான் கப்பலையும், IRGC உலக நாடுகளின் கப்பல்களையும் முடக்கியுள்ளது. இதனால் மொத்த ஹார்முஸ்-ம் தற்போது முழுமையாக மூடப்பட்டு முடங்கியுள்ளது.

IRGC-வின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவுக்கு பொருளாதார அழுத்தம் கொடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. கப்பல் போக்குவரத்தை நிறுத்துவதன் மூலம் சர்வதேச கப்பல் போக்குவரத்து செலவுகள் மற்றும் எண்ணெய் விலை உயர்வை ஏற்படுத்தி, அமெரிக்காவுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கும் நோக்கம் IRGC-க்கு உள்ளது. இந்த ஒரு விஷயம் தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஜேடி வேன்ஸ்-ஐ பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்தது. தற்போதி ஹார்முஸ் திறக்கப்பட்டால் ஈரானுக்கான அதிகாரம் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் இருக்காது எனIRGC நம்பிகிறது.

மேலும், இந்தச் செயல் ஈரானிய ஆட்சிக்குள் IRGC-யின் வலிமையை வெளிப்படுத்தும் ஒரு உத்தியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக, பேச்சுவார்த்தை கொள்கையில் IRGC-யின் முழு கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகவும் தெரிகிறது.

இதோடு டிரம்ப் அடுத்தடுத்து பல விஷயங்களை ஈரான் ஒப்புக்கொண்டதாக வெளியிடும் கருத்து ஈரான் அரசியலில் தொடர்ந்து குழப்பத்தை உருவாக்கி வருகிறது. அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் வாயிலாக செய்யப்படுகிறது. மேலும் ஈரானில் 2-5 முக்கிய தலைவர்கள் மட்டுமே இதில் பங்கெடுக்கிறார்கள். இதனால் குழப்பம் அதிகரித்து தற்போது IRGC தனது வலிமையை ஈரான் அரசியலில் காட்ட துவங்கியுள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தடை

ஏப்ரல் 18 அன்று IRGC-வுக்கு நெருக்கமான ஊடகங்கள் வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்காவின் அதிகப்படியான கோரிக்கைகள் காரணமாக ஈரான் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவும் IRGC-யின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் அரசியல் தலைவர்களுக்கு இருந்த முன்னுரிமை தற்போது IRGC பக்கம் மாறியுள்ளதாக தெரிகிறது.

அமெரிக்க கடற்படை முடக்கம்

ஈரானின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உடனடி பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க கடற்படையின் ஈரானிய துறைமுகங்கள் மீதான தடை இன்னும் அப்படியே நீடிக்கிறது. அமெரிக்க மத்திய தளபதி (CENTCOM) தெரிவித்தபடி, ஏப்ரல் 17 மற்றும் 18 க்கு இடையில் இரண்டு கப்பல்களை திருப்பி அனுப்பியுள்ளது. தடை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 23 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+