For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”வாட்டர் ஃப்ரூப்” ஐபோன் 7- கசியும் தகவல்கள்; களைகட்டுமா ஆப்பிள் மார்க்கெட்?

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஐபோன் 7 வாட்டர் ஃப்ரூப்பாக வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் வெளியாகி 4 மாதங்கள் கூட முடியாத நிலையில் ஐபோன் 7 பற்றிய செய்திகள் பரபரப்பை கிளப்பிவருகின்றன.

தற்போது பயன்பாட்டில் உள்ள ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் முற்றிலும் வாட்டர் ப்ரூப் வசதியை கொண்டவை அல்ல. ஆனால் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால் தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அனைத்து நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

தண்ணீரால் நோ பாதிப்பு:

தண்ணீரால் நோ பாதிப்பு:

அதில் மிக முக்கியமான தொழில்நுட்பம் வாட்டர் ப்ரூப். தண்ணீர், புகை, தூசு போன்றவற்றிலிருந்து பாதிக்கப்படாத ஸ்மார்ட்போன்களுக்கு அதிக முக்கியத்துவம் உருவாகி வருகிறது.

காப்புரிமை தகவல்கள்:

காப்புரிமை தகவல்கள்:

இந்த நிலையில் முற்றிலும் வாட்டர் ஃப்ரூபுடன் கூடிய ஐபோனை உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் களமிறங்கி உள்ளது. சுய சிகிச்சை முறையில் தன்னை மீள் உருவாக்கம் செய்துக்கொள்ளும் பொருட்களை கொண்டு வாட்டர் ஃப்ரூப் ஐபோனை உருவாக்க ஆப்பிள் முயற்சித்துவருவது, அதன் காப்புரிமை தொடர்பான தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

வழிவிடும் அமைப்பு:

வழிவிடும் அமைப்பு:

இந்த ஐபோனின் சிறப்பம்சம் ஹெட்போன் போன்ற சாதனங்களை இதனுடன் இணைக்கும் போதும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அடைப்புகள் சற்று தளர்ந்து அதற்கு வழிவிடும்.

விற்பனை சூடு பிடிக்கும்:

விற்பனை சூடு பிடிக்கும்:

ஹெட்போனை அகற்றியவுடன் இது மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பி துளைகளை மூடிக்கொள்ளும். இந்த முறையானது போனை தண்ணீர், புகை, தூசு போன்றவற்றிலிருந்து காக்கிறது. எனவே விரைவில் வாட்டர் ப்ரூபுடன் கூடிய புதிய ஆப்பிள் ஐபோன் 7 ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமிக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

English summary
Iphone 7 will be water proof Felicity and it will raise the sale of apple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X