இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. ஓராண்டில் மொத்தமாக மாறிய 4 மேஜர் விஷயங்கள்.. "நெருங்கும் பேரழிவு!"
டெல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் வெடித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தற்போதைய சூழலில் இந்த போர் முடிவதாகத் தெரியவில்லை. இந்த போர் மத்திய கிழக்குப் பகுதியில் மட்டுமின்றி உலகெங்கும் 4 முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்தாண்டு இதே நாள் தான்.. இஸ்ரேல் நாட்டில் நுழைந்து ஹமாஸ் படை அத்துமீறித் தாக்குதலை நடத்தியது. இதில் பல நூறு இஸ்ரேல் மக்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை அறிவித்தது.

அதன் பின்னரே காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. கடந்த ஓராண்டாக இந்த போர் தொடர்ந்து வருகிறது. இது அங்கு 4 முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பாதுகாப்பு கேள்விக்குறி: தாக்குதல் தொடங்கியதில் இருந்தே பொதுமக்களின் பாதுகாப்பு தான் முக்கியமான பேசு பொருளாக இருக்கிறது. இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் படையை முழுமையாக ஒழிப்போம் என்பதை நோக்கமாகக் கொண்டு தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். இதனால் காசா மக்கள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வந்துள்ளனர். இது மக்களின் சிவில் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளதாகவும் இஸ்ரேல் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அரசியல் ரீதியான மாற்றம்: அரசியல் ரீதியாகவும் இது இஸ்ரேலில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் முதலில் தாக்குதல் நடத்திய போது, அவர்களுக்குப் பதிலடி தர வேண்டும் என்று இஸ்ரேல் மக்கள் ஒன்றாகக் குரல் கொடுத்தனர். அப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பல நடவடிக்கைகளை எடுத்தார். சில அதிகாரிகள் பிரதமருக்குத் தரும் வகையில் சட்டம் மாற்றி அமைக்கப்பட்டன. இது அதிகார குவியலுக்கு வழிவகுத்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இயக்கவியலை மாற்றியமைக்கும்.
மிக மோசம்: இந்த இரண்டை காட்டிலும் அங்கு மனிதாபிமான நிலை தான் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. காசாவில் ஹமாஸ் மீதான தாக்குதலால் அங்குள்ள பல லட்சம் அப்பாவி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழலே நிலவுகிறது. பல லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும், இந்த போர் என்பது மன ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறதாம். காசாவில் உள்ள சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை தேவைப்படும் என்று சர்வதேச வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். மேலும், போலியா பாதிப்புகளும் அங்கு மீண்டும் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். கடந்த ஓராண்டில் இந்தளவுக்குப் பிரச்சினை மோசமானதாக மாறியிருக்கிறது.
எக்குத்தப்பாக உயர போகும் கச்சா எண்ணெய் விலை? ஈரான் எண்ணெய் கிடங்குகளை குறிவைக்கும் இஸ்ரேல்.. பகீர்
சர்தேச உறவுகள்: கடைசியாகப் பிராந்திய உறவுகளை இந்த போர் மொத்தமாகச் சீர்குலைத்துவிட்டது. இந்த போர் எப்போது முடியும் என்றே தெரியவில்லை. உலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரத் தீவிரமாக முயன்று வருகிறது. ஆனாலும், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இதனால் உலக நாடுகள் வெளிப்படையாகவே இஸ்ரேலைக் கண்டிக்க தொடங்கியுள்ளன. இந்த மாறிவரும் புவிசார் அரசியல் நிலைமையை மிகவும் சிக்கலானதாக மாற்றியுள்ளது.
வெளியான ஈரான் ஹிட் லிஸ்ட் .. முதல் டார்கெட் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. மொத்தம் 11 தலைகள் குறி?
ஹமாஸ் மீது தாக்குதல் நடந்த வரை ஈரான் இந்த விவகாரத்தில் பெரியளவில் தலையிடவில்லை.. அவ்வப்போது கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொண்டன. ஆனால் எப்போது ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியதோ அப்போதே ஈரான் இந்த விவகாரத்தைக் கவனிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றது ஈரானை ஆத்திரப்படுத்தியது. அதன் பின்னரே இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தொடங்கியது. இது பிராந்திய அமைதியை மொத்தமாகச் சீர்குலைத்துவிட்டது.
இன்றுடன் போர் தொடங்கி ஓராண்டு ஆகிவிட்டது. ஆனாலும், இப்போதைக்குப் போர் முடிவதாகத் தெரியவில்லை. மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்படுவது இரு நாடுகளை மட்டும் பாதிக்காது. அது சர்வதேச அளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதே இப்போது உலக நாடுகளின் கவலையாக உள்ளது.












Click it and Unblock the Notifications