For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தாலி நில நடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250-ஆக அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

ரோம்: இத்தாலியில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அக்குமோலி, அமாட்ரைஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது. 368க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாலி நாட்டின் மத்திய பகுதிகள் தெற்கு பகுதிகளில் நேற்று அதிகாலை கடுமையான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தை, அந்த நாட்டு நேரப்படி அதிகாலை 3.36 மணிக்கு மக்கள் உணர்ந்துள்ளனர்.

Italy earthquake: Death toll rises to at least 159

அக்குமோலி, அமாட்ரைஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குட்டிநகரமான அமாட்ரைசில், பாதி ஊர் தரைமட்டமாகிவிட்டதாக அந்நகர மேயர் கூறியுள்ளதில் இருந்து பாதிப்பின் தீவிரத்தை உணர முடியும்.

இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 368 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். சேதம் அதிகம் என்பதால், உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை அடையாளம் காணுவதற்காக மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறகிறது.

அந்த நாட்டில் இப்போதுதான் காலைவேளை என்பதால் தேடுதல் பணி துரிதமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. எனவே, மீட்கப்படுவோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

English summary
The death toll from a powerful earthquake that rattled a remote area of central Italy on Wednesday has risen to at least 159, Italian authorities say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X