For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்கள் செய்தது தவறு.. மிகப்பெரிய விளைவுகளை சந்திப்பீர்கள்.. இந்தியாவிற்கு பாக். விடுத்த எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Pakistan warning: மிகப்பெரிய விளைவுகளை சந்திப்பீர்கள்..பாகிஸ்தான் எச்சரிக்கை- வீடியோ

    இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய உயர் கமிஷனர் அஜய் பிசாரியாவிற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. நேற்று காலை அதிரடி திருப்பமாக ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. ராஜ்யசபாவில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

    நேற்று இந்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 61 வாக்குகளும் பதிவாகின. மேலும்
    மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது.

    என்ன செய்யும்

    என்ன செய்யும்

    இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கான இந்திய உயர் கமிஷனர் அஜய் பிசாரியாவிற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில், காஷ்மீரில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை விதிகளுக்கு முரணானது. ஐநாவில் இந்தியா செய்த ஒப்பந்தங்களை இந்திய அரசு தற்போது மீறி உள்ளது. பல ஒப்பந்தங்களை தற்போது இந்தியா முன்னேறி உள்ளது.

    மீண்டும் சட்டம்

    மீண்டும் சட்டம்

    இந்தியா நேற்று பிறப்பித்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும். உடனே இந்தியா காஷ்மீரில் அனைத்து விதமான புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும். காஷ்மீர் எப்படி இருந்ததோ அப்படியே இனி மீண்டும் மாற்ற வேண்டும், என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

    என்ன பதில்

    என்ன பதில்

    இதற்கு பதில் அளித்த உயர் கமிஷனர் அஜய் பிசாரியா, ஜம்மு காஷ்மீரில் இந்தியா செய்த மாற்றம் என்பது எல்லை பிரச்சனை கிடையாது. இங்கு இந்தியா செய்த மாற்றம் என்பது உள்நாட்டு பிரச்சனை. இதில் ஐநாவின் மீறல் எதுவும் கிடையாது. இதில் பாகிஸ்தானிடம் அனுமதி கேட்க வேண்டியது இல்லை.

    ஏன்

    ஏன்

    காஷ்மீரில் எல்லையில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது. அதற்கு பாகிஸ்தானும் ஒரு காரணம். தற்போது இந்த சட்டம் நீக்கப்பட்ட பின் கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீரில் அமைதி திரும்பும். அந்த மாநிலம் வளம் அடையும், என்று உயர் கமிஷனர் அஜய் பிசாரியா அறிவுரை வழங்கி உள்ளார்.

    English summary
    Jammu Kashmir bill : Pakistan Summons Indian High Commissioner.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X