சுஷ்மா சுவராஜுடன் குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினர் சந்திப்பு

பாகிஸ்தானில் மரண தண்டனை கைதியாக இருக்கும் குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினர் இன்று சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு நிகழ்த்தினர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மரண தண்டனை கைதியாக இருக்கும் குல்பூஷன்.. தன் குடும்பத்தினரை சந்தித்தார்!- வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மரண தண்டனை கைதியாக இருக்கும் குல்பூஷன் ஜாதவ் பெரும் போராட்டத்திற்கு பின் தன் குடும்பத்தினரை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பிற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பெரிதும் முயற்சி எடுத்தார்.

    இந்த நிலையில் இந்த சந்திப்பு முடிந்த பின் இன்று குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினர் இன்று சுஷ்மா சுவராஜை சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு முயற்சி செய்ததற்காக ஜாதவ் குடும்பத்தினர் சுஷ்மாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

    பெரும் பாதுகாப்பிற்கு மத்தியிலேயே ஜாதவ் குடும்பத்தினர் பாகிஸ்தானில் ஜாதவை சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உளவு

    உளவு

    இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்தவர் குல்பூஷன் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் இருந்த போது உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் இந்தியரான இவர் ஈராக்கில் இருந்து வந்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்தியா இந்த செய்தியை மறுத்தது. அவர் ஈராக்கில் வியாபாரம் செய்ததாகவும், அவரை நாடு கடத்திவிட்டதாகவும் இந்தியா கூறியது.

    தூக்கு தண்டனை

    தூக்கு தண்டனை

    இவர் உளவு பார்த்தாக கூறி அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். இந்நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது. இந்தியாவின் கடும் முயற்சிக்கு பின் சர்வதேச நீதிமன்றம் இந்த தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

    சந்திப்பு

    சந்திப்பு

    இதையடுத்து ஜாதவ் அவரது குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்கப்பட்டார். நேற்று பாகிஸ்தான் தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. ஜாதவின் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் அவரை சந்தித்தனர். ஆனால் இவர் கண்ணாடிக்கு பின் பக்கமும், அவரது குடும்பம் கண்ணாடிக்கு அடுத்த பக்கமும் உட்கார வைக்கப்பட்டனர்.

    சுஷ்மாவிற்கு நன்றி

    சுஷ்மாவிற்கு நன்றி

    இந்த சந்திப்பு நிகழ்வதற்கு இந்திய வெளியுறவுத்துறை முக்கிய பங்கு வகித்தது. இதனால் ஜாதவின் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் இன்று சுஷ்மாவை சந்தித்தனர். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததற்காக சுஷ்மாவிற்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+