For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்!

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து தங்கள் படைகளை வெளியேற்றுவதாக குர்து படைகள் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டமாஸ்கஸ்: சிரியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து தங்கள் படைகளை வெளியேற்றுவதாக குர்து படைகள் தெரிவித்துள்ளது.

சிரியாவில் நடந்து வந்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு இடையிலான போர் ஆகும் இது.

சிரியாவில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து சிரியாவில் உள்ள குர்து படைகள் மற்றும் அருகே இருக்கும் துருக்கி நாட்டின் படைகளுக்கு இடையே கடுமையான போர் மூண்டது.

எப்படி முக்கியம்

எப்படி முக்கியம்

அமெரிக்க ராணுவமும், குர்து படைகளும் சேர்ந்துதான் சிரியாவில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போராடி வந்தது. இந்த நிலையில் ஐஎஸ் படைகள் சிரியாவில் ஒடுக்கப்பட்டதால் போர் நின்றது. இதற்கு பின் அமெரிக்க படைகள் வெளியேறியதால் குர்து படைகள் தனித்து விடப்பட்டது. குர்து படைகளை பல வருடங்களாக எப்போது தாக்கலாம் என்று துருக்கி திட்டமிட்டு வந்தது.

அமெரிக்கா

அமெரிக்கா

இந்த நிலையில்தான் அமெரிக்க படைகள் வெளியேறியது. இதை துருக்கி சரியாக பயன்படுத்தி குர்து படைகள் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 6 நாட்களாக சிரியாவில் ஏவுகணை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது.துருக்கி குர்து இடையிலான போர் வலுவாக்கிக் கொண்டே வந்தது.

என்ன ஒப்பந்தம்

என்ன ஒப்பந்தம்

இந்த நிலையில் இதில் தலையிட்ட அமெரிக்க அரசு, குர்து படைகள் மீதான தாக்குதலை உடனே நிறுத்தும்படி துருக்கிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் துருக்கி படைகள் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் துருக்கி மற்றும் குர்து படைகளுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

வெளியேறும்

வெளியேறும்

அதன்படி குர்து படைகள் தாங்கள் இருக்கும் வடகிழக்கு சிரியாவில் 30 கிமீ பகுதியை விட்டுக்கொடுக்கும். அதேபோல் துருக்கி படையும் 150 கிமீ பகுதியை விட்டு வெளியேறும். மொத்தமாக 180 கிமீ பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து, அங்கு அகதிகள் முகாம் கட்டப்படும் என்று முடிவாகி உள்ளது. ஆகவேதான் தற்போது போர் நிறுத்தப்பட்டுள்ளது.

எல்லாம் சரியானது

எல்லாம் சரியானது

இதனால் குர்து படைகள் முதல்முறையாக சிரியாவின் எல்லையில் இருந்து வெளியேற தொடங்கி உள்ளது. பல ஆயிரம் குர்து வீரர்கள் மொத்தமாக வெளியேறி வருகிறார்கள். ஒப்பந்தத்தின்படி அங்கு 5 நாட்கள் போர் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Syria War: Kurdish forces decides to withdraw from northeast Syria after the US had a deal with Turkey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X