கிர்கிஸ்தானில் வெடித்த திடீர் வன்முறை! இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்
பிஷ்கெக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்களுக்கு இந்தியத் தூதரகம் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
மத்திய ஆசியப் பகுதியில் அமைந்துள்ள குட்டி நாடு தான் கிர்கிஸ்தான்.. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே வெறும் 70 லட்சம் தான். இந்த நாட்டில் பல்வேறு வெளிநாட்டு மாணவர்களும் தங்கிப் படித்து வருகிறார்கள்.

குறிப்பாக இங்கு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். இதற்கிடையே இப்போது அந்த கிர்கிஸ்தான் நாட்டில் திடீரென வன்முறை ஏற்பட்டுள்ளது. கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து வன்முறை வெடித்துள்ளது.
பதற்றமான சூழல்: இதனால் அங்குப் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பிஷ்கெக்கில் உள்ள இந்தியா மாணவர்கள் கவனமாக இருக்கும்படியும் வெளியே வராமல் வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலைமை அமைதியாகவே உள்ளதாக கிர்கிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கிர்கிஸ்தானில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் அங்கு இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் வசிக்கும் விடுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்ததாக வெளியானது. வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து கிர்கிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் இது குறித்து விளக்கமளித்து..
நடவடிக்கை: அதில் "இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் வன்முறையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது நிலைமை முழுக்க முழுக்க கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த வன்முறையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் காயமடைந்ததாகத் தகவல் கிடைக்கவில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தச் சம்பவம் குறித்து கிர்கிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம், "நாங்கள் அங்குள்ள இந்திய மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது, ஆனால் தற்போதைய சூழலில் மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உதவி எண் 0555710041" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள்: நமது வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகளின்படி, சுமார் 14,500 இந்திய மாணவர்கள் இப்போது கிர்கிஸ்தானில் வசிக்கின்றனர். பிஷ்கெக்கில் உள்ள இந்திய மாணவர்களின் நிலையைக் கண்காணித்து வருவதாகவும் தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தூதரகம்: அதேபோல பாகிஸ்தான் தூதரகமும் தங்கள் மாணவர்களுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பாகப் பாகிஸ்தான் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில், "பிஷ்கெக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களின் சில விடுதிகள் மற்றும் சர்வதேச மாணவர்களின் குடியிருப்புகள் தாக்கப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் அதிகம் வசித்து வந்துள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. பாகிஸ்தான் மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வரும் போதிலும், அது குறித்து உறுதியான தகவல்கள் எங்களுக்கு வரவில்லை.
அங்கு நிலைமை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. வன்முறை முழுமையாக கட்டுக்குள் வரும் வரை பாகிஸ்தான் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications