மோடிக்கு வார்னிங்.. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசை கவிழ்த்ததே நாங்க தான்.. மிரட்டும் LeT பயங்கரவாதி

Subscribe to Oneindia Tamil

டாக்கா: ‛‛மோடியை தோற்கடித்துவிட்டாம். ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததே நாங்க தான். இது மோடிக்கும் தெரியும்’’ என்று பஹல்காம் தாக்குதலை நடத்திய ‛தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட்' பயங்கரவாத அமைப்பின் தாய் அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் கமாண்டர் தெரிவித்துள்ளான். அதோடு பிரதமர் மோடிக்கு கடும் வார்னிங்கும் விடுத்துள்ளான்.

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். இவர் நம் நாட்டுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடந்தது.
பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

bangladesh lashkar E Taiba Sheikh hasina

அதன்பிறகு வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் நம் நாட்டை விரும்புவது இல்லை. பாகிஸ்தான், சீனா, துருக்கியுடன் நெருக்கம் காட்டி வருகிறது.

1971 போரில் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் உருவாக இந்தியா என்னவெல்லாம் செய்தது என்பதை மறந்து விட்டு முகமது யூனுஸ் அரசு நம் நாட்டுக்கு துரோகம் இழைத்து வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு சரிவை சந்தித்துள்ளது. முகமது யூனுஸின் செயலுக்கு நம் நாடும் உரிய பதிலடியை கொடுத்து வருகிறது.

ஆனாலும் முகமது யூனுஸ் திருந்தவில்லை. தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், அதன் உளவு அமைப்புகளிடம் தீவிர நெருக்கம் காட்டி வருகிறது. வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து தான் தனி நாடாக 1971ல் பிரிந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக நம் ராணுவம் போர் புரிந்து வங்கதேசத்தை உருவாக்கியது. இதையடுத்து பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான உறவு முற்றிலுமாக இல்லாமல் இருந்தது. தற்போது 54 ஆண்டுகளுக்கு பிறகு இருநாடுகளுக்கான உறவு மேம்பட தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் பாகிஸ்தான் பயங்கரவாதி வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததே நாங்கள் தான் என்று கூறியுள்ளதோடு, பிரதமர் நரேந்திர மோடிக்கும் வார்னிங் செய்யும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளான். அதாவது பாகிஸ்தான் அணுஆயுதம் வைத்துள்ளது. இந்த அணு ஆயுத சோதனையில் வெற்றி பெற்ற தினம் மே 28 ல் கொண்டாடப்பட்டது. இதில் நடந்த நிகழ்ச்சியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முசாமில் இக்பால் ஹாஷ்மி பங்கேற்றார். இவன் அமெரிக்காவால் தேடப்படும் பயங்கரவாதியாக உள்ளான்.

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய கமாண்டராக உள்ள முசாமில் இக்பால் ஹாஷ்மி, ‛‛நம் பிரதமர் மோடியையும் பகிரங்கமாக சீண்டினான்.

இதுதொடர்பாக அந்த பயங்கரவாதி, ‛‛கடந்த ஆண்டு உங்களை நாங்கள் வங்கதேசத்தில் தோற்கடித்தோம். மோடிக்கு இது நன்கு தெரியும். மே 11ம் தேதி மட்டும் நீங்கள் தாங்கியிருந்தால் நாங்களும் பதிலுக்கு உங்களை தாக்கியிருப்போம். மே 7 ம் தேதி இரவில் தாக்குதல் நடத்தினீர். ஆனால் மே 10ம் தேதி நாங்கள் காலை வேளையில் தாக்குதல் நடத்தினோம். நாங்கள் உங்களுக்கு பதிலடி கொடுப்போம். கொடுத்து கொண்டிருக்கிறோம். எங்களின் மெசேஜை கவனமாக கேளுங்கள். நீங்கள் போர்க்களத்துக்கு வந்தால் நாங்களும் போர்க்களத்துக்கு வருவோம்'' என்று வாய்க்கொழுப்புடன் பேசி உள்ளான்.

வங்கதேசத்தில் இருந்த ஷேக் ஹசீனா அரசு நம் நாட்டுடனும், பிரதமர் மோடியுடனும் நல்ல நட்பில் செயல்பட்டு வந்தது. இதனால் ஷேக் ஹசீனா அரசை வீழ்த்தி நம் நாட்டுக்கு எதிரான முகமது யூனுஸின் ஆட்சியை அமைத்துள்ளதை தான் அந்த பயங்கரவாதி இப்படி குறிப்பிட்டுள்ளான். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தபோதே பாகிஸ்தான் அல்லது சீனாவின் சதி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.இப்போது பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி அதனை உறுதிப்படுத்தி உள்ளான்.

தற்போது வீடியோ வெளியிட்டுள்ள முசாமில் இக்பால் ஹாஷ்மி அங்கம் வகிக்கும் லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான ‛தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட்' தான் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்றது.

அதன்பிறகு தான் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் வலுத்தது. நம் நாட்டின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. அடித்த அடியில் சண்டையை நிறுத்துங்கள் என்று மண்டியிட்டு சரணடைந்த பாகிஸ்தான் இப்போது பயங்கரவாதிகளை வைத்து நம் நாட்டின் பிரதமருக்கு மிரட்டல் கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+