பாதாள உலகிற்கு செல்லும் வழி.. மெக்சிகோ பிரமிடில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட சுரங்க பாதை!

Subscribe to Oneindia Tamil

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள பிரமாண்ட பிரமிடுகளில் ஆராய்ச்சியாளர்கள் பெரிய சுரங்க பாதைகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

மெக்சிகோவில் இருக்கும் பிரமிடுகள் பல விதமான புதிர்களை கொண்டு இன்னும் மர்மத்துடன்தான் இருக்கிறது. இங்கு என்ன மாதிரியான வாழ்க்கைமுறை பின்பற்றப்பட்டது, மக்கள் எப்படி இவ்வளவு பெரிய பிரமிடுகளை கட்டினார்கள் என்று இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

அங்கு வாழ்ந்த மக்களை டியோட்டி ஹூக்கான் மக்கள் என்று அழைக்கிறார்கள். இங்கு இருக்கும் பிரமிட் ஆப் சன் மற்றும் பிரமிடு ஆப் மூன் (pyramid of the sun and moon) இரண்டிற்கும் அருகில் 2 லட்சம் மக்கள் வசித்து இருக்க வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

[செவ்வக வடிவில் 2 ராட்சச ஐஸ் பாறை.. விஞ்ஞானிகளை உறைய வைத்த வடிவம்.. அண்டார்டிகா அதிசயம்!]

என்ன கண்டுபிடித்தனர்

என்ன கண்டுபிடித்தனர்

இந்த நிலையில்தான் டியோட்டி ஹூக்கான் மக்கள் பயன்படுத்தி வந்த சுரங்க பாதையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். பிரமிடு ஆப் மூன் இருக்கும் பகுதிக்கு அடியில் இந்த சுரங்க பாதையை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்ந்து நீண்டு கொண்டே செல்வதாகவும், இடையில் தடுப்பு உள்ளதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

தொடர்புபடுத்தி உள்ளனர்

தொடர்புபடுத்தி உள்ளனர்

அதேசமயம் இந்த சுரங்க பாதை பிரமிட் ஆப் சன்னிற்கும் நெருக்கமாக உள்ளது. அதில் இருந்து ஒரு பாதை நீண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை எப்படி உருவாக்கி இருப்பார்கள் என்று ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். இவ்வளவு பெரிய பிரமிடுக்கு கீழே ஏன் இப்படி ஒரு சுரங்க பாதை வைத்துள்ளனர் என்று சந்தேகமும் எழுந்துள்ளது.

என்ன சடங்கு

என்ன சடங்கு

இது மத சடங்காக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதாவது பாதாள உலகத்துடன் தொடர்பு கொள்வதற்காக டியோட்டி ஹூக்கான் இந்த பாதையை வைத்துள்ளனர். இதன் வழியாக அவர்கள் பூமிக்கு அடியில் உள்ள பாதாள உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்று நம்பி இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.

இன்னும் கிடைக்கும்

இன்னும் கிடைக்கும்

அதேபோல் அங்கு சில பூஜை நடந்துள்ளதற்கான ஆதாரமும் உள்ளது. இதன் மூலம் இங்கும் தங்கள் வைரம் போன்ற பொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அடுத்தக்கட்டமாக அதை கண்டுபிடிப்பதுதான் வேலை என்ற முடிவில் இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+