For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ட்ரம்பின் பைத்தியக்காரத்தனம் மனித குலத்தையே அழித்துவிடும்.. சேகுவாரா மகள் காட்டம்!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பைத்தியக்காரத்தனத்தால் மனித குலமே அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சே குவாராவின் மகள் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ட்ரம்பின் பைத்தியக்காரத்தனம் மனித குலத்தையே அழித்துவிடும்-வீடியோ

    ஹவானா: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பைத்தியக்காரத்தனத்தால் மனித குலமே அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சே குவாராவின் மகள் அலெய்டா குற்றம்சாட்டியுள்ளார்.

    சே குவாரா புரட்சிகளில் ஈடுபட்டதற்காக பொலியாவில் 1967ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி அரச படையினரால் கைது செய்யப்பட்டு அடுத்த நாளே அவரை பொலிவிய படையினர் கொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கியூபாவில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    சாண்ட்டா கிளாராவில் உள்ள சே குவெராவின் சிலை மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். இதில் கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மற்றும் பல பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    ட்ரம்பின் பைத்தியக்காரத்தனம்

    ட்ரம்பின் பைத்தியக்காரத்தனம்

    இந்நிலையில் கியூபா தலைநகர் ஹவானாவில் சே குவாராவின் மூத்த மகளான 57 வயதான அலெய்டா குவாரா மார்ச் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்பின் பைத்தியக்காரத்தனத்தால் மனித குலமே அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

    பைத்தியக்காரத்தனத்திடம் அதிகாரம்

    பைத்தியக்காரத்தனத்திடம் அதிகாரம்

    நாம் மனித குலத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பது தான் பிரச்சனை என்றும் அலெய்டா கூறினார். பைத்தியக்காரத்தனம் அதிகம் உடைய அமெரிக்க அதிபரிடம் அதிகாரம் கிடைத்ததால், பல்வேறு பிரச்னைகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

    நம் உலகையே நாம் அழிக்கிறோம்

    நம் உலகையே நாம் அழிக்கிறோம்

    நாம் வசிக்கும் உலகையே நாம் அழிக்கிறோம் என்பதை நாம் உணரவில்லை என்றும் அவர் ட்ரம்ப்பை குறிப்பிட்டார். ட்ரம்பின் பைத்தியக்காரத்தனத்தால் க்யூபா 10 ஆண்டுகள் பின்னோக்கி செல்வது போன்று தெரிவதாகவும் அவர் கூறினார்.

    நமக்கு அதிக நேரமில்லை

    நமக்கு அதிக நேரமில்லை

    மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற அவர், நாம் விழித்துக்கொள்ள வேண்டும். நமக்கு அதிக நேரம் இல்லை என்றும் கூறினார்.

    கட்டுப்பாடுகளை விதித்த ட்ரம்ப்

    கட்டுப்பாடுகளை விதித்த ட்ரம்ப்

    1961 ஆம் ஆண்டு கியூபாவுடன் கைவிடப்பட்ட ஒப்பந்தத்தை 2014ஆம் ஆண்டு பாரக் ஒபாமா மறுபரிசீலனை செய்ததையும் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது விமர்சித்திருந்தார். மேலும் தொழில் ரீதியிலான கியூபா பயணத்துக்கும் அவர் கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.

    நோயை குணப்படுத்துவதை விட தடுப்பதே

    நோயை குணப்படுத்துவதை விட தடுப்பதே

    ட்ரம்பின் இந்த கட்டுப்பாடுகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மாற்றத்தை தேடுவதற்கான நேரம் இது என்ற அவர், நோயை குணப்படுத்துவதை விட நோய் வரும் முன் தடுக்க வேண்டும் என்பதே கியூபாவின் கொள்கை என்றும் கூறினார். அலெய்டா அவ்வப்போது அவரது குடும்பத்தின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Cuban Communist revolutionary Che Guevara's daughter fears that the "madness" of US president Donald Trump could "destroy" humanity.The man has so much power to destroy humanity, and we are part of that humanity. That is the problem Aleida said
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X