For Daily Alerts
Just In
அந்தமான் தீவுகளில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 6.7 ஆக பதிவு!!

அந்தமான் - நிக்கோபர் தீவுகள் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபர் தீவிற்கு தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானது.
ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் தலைநகர் போர்ட் ப்ளேயரில் இந்த நிலநடுக்கம் உணரப்படவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.