2014ல் வந்த சுனாமியை போலவே.. அதே மாதிரி பேரலை.. நடுங்கிப் போன துருக்கி, கிரீஸ்!
துருக்கி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
அங்காரா: துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதில் 20-க்கும் மேற்பட்ட கட்டிடம் இடிந்து தரைமட்டமானதாக துருக்கி முதற்கட்ட தகவலாக தெரிவித்துள்ளது... அத்துடன் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியானதாகவும் கூறப்படுகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால், துருக்கியின் மேற்கு பகுதிகள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். பல கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இங்குதான், 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அப்படியே இடிந்து விழுந்து தரைமட்டமாயின.. அந்த கட்டிட இடிபாட்டிற்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும், முதற்கட்டமாக 4 பேர் உயிரிழந்ததாகவும், 120 பேர் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

கட்டிடஇடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.. இதற்காக தேசிய பேரிடம் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை.
ஆனால், ஏகன் கடற்பகுதியில் அமைந்துள்ள சமோஸ் தீவில் சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டதாகவும், அதனால் கடல் அலைகள் இஸ்மிர் நகருக்குள் புகுந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.. மேலும் தெருக்களிலும், சாலைகளிலும் நின்ற கார்களை நீரில் மிதக்கின்றன.
Pray for Greece and Turkey 🇬🇷🇹🇷
— Super Greek (@TheSuperGreek_) October 30, 2020
A 7.0 Magnitude earthquake has just shaken Izmir, Turkey and the close by Greek Island of Samos.
More updates to follow. pic.twitter.com/h0SjafR1Bl
கடந்த 2004-ல் இந்தோனேசியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இந்தோனேசியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டதை போலவே, இந்த துருக்கி நிலநடுக்கமும், கடலில் எழுந்த சுனாமி அலையும் நினைவுபடுத்துகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications