For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவில் நைட் கிளப் அருகே கையெறி குண்டு வெடித்து ஒருவர் சாவு, 13 பேர் காயம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நைட் கிளப் அருகே குண்டு வெடித்து 1 ஒருவர் உயிரிழந்து 13 பேர் படுகாயம் அடைந்துள்ளளனர்.

கோலாலம்பூரில் பிரபலமான செர்ரி பிளாசம் என்ற நைட் கிளப் உள்ளது. வெளி நாட்டவர்களும் உள்ளூர் வாசிகளும் அங்கு தங்குவது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை கிளப் வெளியே பயங்கர சத்தத்துடன் ஒரு கையெறி குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 13 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், புகித் பிண்டாங் என்ற பகுதியில் இரு பிரிவினருக்கும் இடையில் அதிகாலை கடும் சண்டை நடந்துள்ளது அதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டுள்ளனர். அதில் ஒருவர் கையெறி குண்டை கொண்டு தாக்கி உள்ளார்.

சம்பவ நடந்த இடத்தில் கார் அருகில் கையெறி குண்டு ஒன்றும் பறிமுதல் செய்யபட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் சீனா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாட்டை சார்ந்த சுற்றுலாவாசிகள் பாதிக்கபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
One of the victims involved in the bombing incident at Bukit Bintang died at the Kuala Lumpur Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X