ஆசிர்வதிப்பதாக கூறி கண்ட இடத்தில் கை வைத்தார்.. இந்திய சாமியார் மீது பிரபல மாடலிங் நடிகை பகீர் புகார்
மலேசியா: இந்தியாவை சேந்த சாமியார் ஒருவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான லிஷால்லினி கனரன் என்பவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். ஆசிர்வதிப்பதாக கூறி பின்னால் இருந்து அநாகரிகமாக தொட்டதாகவும், ஆடைகளை கழற்றுமாறு கூறியதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான லிஷால்லினி கனரன், இந்தியாவை சேந்த சாமியார் ஒருவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முன்வைத்து இருக்க கூடிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாவில் லிஷாலினி பதிவிட்டுள்ளதாவது: -

மலேசியாவில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி நான் சென்றேன். எனது தயார் இந்தியாவில் இருப்பதால் நான் மட்டும் சென்றேன். அந்த கோயிலில் உள்ள ஒரு சாமியார் எனக்கு வழக்கமாக மத சடங்குகள் பற்றி வழிகாட்டுவார். கோயிலில் உள்ள சம்பிரதாயங்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது என்பதால், அவரது உதவி எனக்கு தேவைப்பட்டதாக இருந்தது.
பிறகு சந்திக்குமாறு கூறினார்
ஆனால் சம்பவம் நடைபெற்ற அன்று, நான் சாமி கும்பிட்டு கொண்டு இருந்தேன். அப்போது என்னிடம் வந்த சாமியார், இந்தியாவில் இருந்து புனித நீர் கொண்டு வந்து இருப்பதாகவும் ஒரு கயிறு எனக்காக கொண்டு வந்து இருப்பதாகவும் ஆசிர்வதிப்பதாகவும் கூறினார். என்னுடைய பிரார்த்தனை நேரம் முடிந்த பிறகு என்னை வந்து சந்திக்குமாறு கூறினார். இதன்படி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தேன். அவர் பிற பக்தர்களுக்கு தொடர்ந்து ஆசிர்வாதம் வழங்கி கொண்டு இருந்தார். '
பின்னால் நின்று என்னை தொட்டார்
அதன்பிறகு, என்னை அவரது தனி அறைக்கு வருமாறு அழைத்தார். அந்த அறையில் வைத்து என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். முதலில் என் மீது நறுமணம் வீசும் ஒரு நீரை தெளித்தார். பின்னர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். என்னை ஆடைகளை கழற்றுமாறு கூறினார். நான் மறுப்பு தெரிவிக்கவே, இறுக்கமான உடைகளை அணிந்து இருப்பதாக என்னை திட்டினார்.
பின்னர் எனது பின்னால் நின்று அநாகரிமான முறையில் என்னை தொட்டார். தான் கடவுளுக்கு சேவை செய்வதால் இது பெரும் ஆசிர்வாதம் என்றார். நடப்பது அத்தனையும் தவறு என எனது மூளைக்கு தெரிந்தது. ஆனாலும் என்னால் நகர முடியவில்லை. நான் அப்படியே உறைந்து நின்றேன். ஏன் அப்படி என்பதை தற்போதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
பொதுவெளியில் பகிர வேண்டாம்
நடிகை புகார் கூறிய சாமியார் இந்தியாவை சேர்ந்தவர் என்றும் வழக்கமான சாமியார் இல்லாததால், அவர் தற்காலிமாக கோயில் பணிகளில் ஈடுபட்டதாகவும் மலேசியாவில் உள்ள சேபாங் மாவட்ட போலீஸ் ஏசிபி நூர்ஹிசாம் பஹமன் கூறினார். இதற்கிடையே, தனக்கு நடந்த விஷயத்தை பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று விசாரணை அதிகாரி கூறினார் எனவும், மீறி தெரிவித்தால் உங்கள் மீது குறை சொல்வார்கள் எனத்தெரிவித்ததாகவும், எனினும், அவரது அறிவுரையை தான் ஏற்கவில்லை எனவும் நடிகை கூறியுள்ளார்.
தப்பி ஓடிவிட்டார்
கோயிலில் தனக்கு நடந்த கொடுமை குறித்து கடந்த 4 ஆம் தேதி நடிகை புகாரளித்துள்ளார். ஆனால் கோயிலுக்கு சென்ற போது அந்த சாமியார் அதற்குள் தப்பி ஓடிவவிட்டதாகவும், இந்த விவகாரம் குறித்து அவரிடம் யாரோ முன்பே கூறியிருக்கிறார்கள். தற்போது வரை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மலேசிய போலீசார் இது குறித்து கூறுகையில், தப்பி ஓடிய சாமியாரை தேடி வருவதாகவும் விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications