• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விமான விபத்தில் பலியான மலேசிய தமிழ் நடிகை சுபாஷினி ஜெயா

|

கோலாலம்பூர்: ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானத்தில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் நடிகையான சுபாஷினி ஜெயரத்னம் என்ற சுபா ஜெயாவும் பயணித்துப் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. குடும்பத்தோடு இவர் பலியாகியுள்ளார்.

மரணத்திற்கு 2 நாட்களுக்கு முன்புதான் இவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தைச் சேர்ந்த தனது கணவர் மற்றும் மகளுடன் இந்தக் கோர சம்பவத்தில் பலியாகியுள்ளார் ஜெயா.

ஜெயா...

ஜெயா...

சுபாஷினி ஜெயரத்னம்.. ஜெயா என்றும் சுபா என்றும் தனது குடும்பத்தாராலும், நண்பர்களாலும், உறவினர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவரான இந்த இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண். நாடகம், நடனம், சினிமா, டிவி என்று பல்துறைகளில் திறமையுடன் திகழ்ந்து வந்தவர்.

"ஸ்பானர்" ஜெயா

ஸ்பானர் ஜெயா என்பது இவர் நடித்த பிரபலமான டிவி நிகழ்ச்சியாகும். இதுபோக காடிஸ் 3, சுகமான சுமைகள் ஆகியவையும் இவரது பிரபலமான நாடகங்களாகும். மேலும் போர்பிளே, சார்லிஸ் ஆன்ட்டி, ஹங்கிரி பார் ஹோப் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

38 வயதில் உதிர்ந்த ஜெயா

38 வயதில் உதிர்ந்த ஜெயா

38 வயதான ஜெயா, கோலாலம்பூரில் வசித்து வந்தார். மலேசிய விமான விபத்துக்கு 2 நாட்களுக்கு முன்புதான் தனது 38வது பிறந்த நாளைக் கொண்டாடியிருந்தார் ஜெயா.

இன்டர்நெட் பைத்தியமாக ஜெயா

இன்டர்நெட் பைத்தியமாக ஜெயா

சோஷியல் நெட்வொர்க்கிங் என்ற மேடை நாடகத்தில் இன்டர்நெட் மீது பைத்தியமாக திரியும் பெண் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தவர் ஜெயா.

புகழை விரும்பாத ஜெயா

புகழை விரும்பாத ஜெயா

ஜெயாவுடன் பல நாடகங்களில் இணைந்து பணியாற்றியுள்ள கைரில் என்ற நடிகர் - இயக்குநர் கூறுகையில், புகழுக்காக நடிக்க விரும்பாதவர் சுபா ஜெயா. நடிப்பின் மீது அதிக மோகம் கொண்டவர். தனது நடிப்புத் திறமையை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்.

எல்லோருக்கும் பிடித்த ஜெயா

எல்லோருக்கும் பிடித்த ஜெயா

சுபா ஜெயாவை விரும்பாதவர்களே கிடையாது. அனைவரின் பாசத்தையும் பெற்றவர். தனது வாழ்க்கையில் நிறைய திட்டங்களை வைத்திருந்தார். இப்போது அவர் இல்லை என்பதையே நம்ப முடியவில்லை என்றார்.

ஜெயாவும், அப்பா ஜெயரத்னமும்

ஜெயாவும், அப்பா ஜெயரத்னமும்

2010ம் ஆண்டு சுபா ஜெயாவும், அவரது தந்தை ஜெயரத்னமும் இணைந்து மரி மெனரி என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றனர். அதன் பிறகு நிறைய நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஜெயா.

ஜெயாவின் திருமணம்

ஜெயாவின் திருமணம்

அதே ஆண்டில் நெதர்லாந்தைச் சேர்ந்த இயக்குநர் கோயஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் சுபா ஜெயா.

மகளை மாமனார், மாமியாரிடம் காட்டச் சென்ற ஜெயா

மகளை மாமனார், மாமியாரிடம் காட்டச் சென்ற ஜெயா

கோயஸ் - சுபா ஜெயா தம்பதிக்கு கேலா என்ற மகள் உள்ளார். விரைவில் இவருக்கு 2வது பிறந்த நாள் வரவுள்ளது. கேலாவை, அவரது தாத்தா பாட்டியிடம் காட்ட நெதர்லாந்து செல்லத் திட்டமிட்டார் ஜெயா.

திரும்பாமலே போன ஜெயா

திரும்பாமலே போன ஜெயா

இதையடுத்து ஜெயா, அவரது கணவர், மகள் ஆகியோர் நெதர்லாந்து பயணித்தனர். அங்கு மாமியார் வீட்டில் மகளோடு சந்தோஷமாக கழித்து விட்டு கணவர், குழந்தையுடன் கோலாலம்பூர் திரும்பியபோதுதான் விமான விபத்தில் சிக்கி மாண்டு போனார் சுபா ஜெயா.

செய்தித்தாளில் பணியாற்றிய ஜெயா

செய்தித்தாளில் பணியாற்றிய ஜெயா

சுபா ஜெயா ஆரம்பத்தில் நியூ ஸ்டிரெயிட் டைம்ஸ் நாளிதழில் காப்பிரைட்டராக பணியாற்றினார். பின்னர் அந்த செய்தித்தாளின் விளம்பரப் பிரிவுக்கு மாறினார்.

தாய்ப்பாலுக்காக குரல் கொடுத்த ஜெயா

தாய்ப்பாலுக்காக குரல் கொடுத்த ஜெயா

திருமணத்திற்குப் பின்னர் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம், குழந்தை வளர்ப்பு ஆகியவை தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Shuba Jaya, who died in the MH17 crash with her husband, Dutch national Paul Goes, and their young daughter Kaela, lived life to the fullest. She made the most of a career spanning dance, theatre, TV and film. She acted in local TV shows like Spanar Jaya, Gadis 3 and Sugumana Sumaigal, and on stage in Fourplay, Charley’s Auntie and Hungry for Hope. The Kuala Lumpur-based Shuba, who celebrated her 38th birthday two days before the tragedy, also had movie roles in Relationship Status and Tokak, and acted in Duit Kecil, part of the 15 Malaysia project.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more