மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு 60 வருடமாக பங்களித்து வரும் பாவை-க்கு சாதனை புத்தக விருது!
கோலாலம்பூர்: மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேல் பங்களிப்பு செய்து வரும் திருமதி.பாவை அவர்களுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மலேசியச் சாதனைப் புத்தக விருது வழங்கப்பட்டது. இந்த விருதளிப்பு விழாவை எழுத்தாளர் சங்கம் மிக விமர்சையாக ஏற்பாடு செய்து இருந்தது.
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பார்வையற்றோர் சங்க அரங்கில் நடைபெற்ற இந்த விருதளிப்பு விழாவில் டேவான் பகாசா டான் புஸ்தாகா தலைமை இயக்குனர் டாக்டர் ஹாசாமி ஜாஜாரி பிரதிநிதியாக பன்மொழி பிரிவுத் தலைவர் டாக்டர் அசிசூல் இஸ்மாயில் கலந்து சிறப்பித்தார்.

அவருடன் உயிரியல் துறையில் உலகளவில் மிகச் சிறந்த நூறு ஆளுமைகளில் ஒருவரான டாக்டர் மஹாலெட்சுமி, உப்சி பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் தம்பு நடராஜன், சங்கத்தின் மேனாள் தலைவர்களான திரு. பெ.இராஜேந்திரன், திரு. மன்னர் மன்னன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மலேசியச் சாதனைப் புத்தக வாரியத்தின் பிரதிநிதி குமாரி மேனகா மலேசியச் சாதனைப் புத்தக விருதை வழங்கியதும் கவிஞரும், "ஒன்இந்தியாதமிழ்" ஜோதிட பக்கத்திற்கு பங்களித்து வரும் பிரபல ஜோதிடருமான, திரு.பெர்னாட்ஷா வாழ்த்துக் கவிதை வாசித்தார்.
அவர்களோடு கூட்டரசு பிரதேசக் கல்வி இலாக்காவின் உதவி இயக்குனர்களான முனைவர் தர்மராஜ் சக்கரியா, உதவி இயக்குனர் திருமதி புஸ்பாதேவி, சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாக்காவின் உதவி இயக்குனர் திரு. செங்குட்டவன்,முனைவர் மனோன்மணி, முனைவர் டத்தின் சரஸ், முனைவர் குமரவேல், மலேசியத் தமிழ்ப்பள்ளி தலையாசிரியர் மன்றத் தலைவர் திரு. எஸ்.எஸ். பாண்டியன், கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவர் சட்சிதானந்தன், பேராக் மாநில எழுத்தாளர் சங்கத் தலைவர் ந.கு. முல்லைச்செல்வன் உட்பட கல்வியாளர்கள், படைப்பாளர்கள், வாசகர்கள், உயர்க்கல்வி மாணவர்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு பாவை அவர்களுக்கு வாழ்த்துக் கூறினார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications