ரூ.30 கோடி லாட்டரி.. காதலிக்கு தூக்கி கொடுத்த இளைஞன்.. டாடா காட்டிவிட்டு பாய் பிரண்ட் உடன் ஓடிய இளம்பெண்!
ஒட்டாவா: கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ.30 கோடி லாட்டரியை வென்றுள்ளார். அந்தத் தொகையைப் பெற்று வருமாறு அவர் தனது காதலியை அனுப்பிய நிலையில், அந்த பணத்தை வாங்கிய அவர் தனது காதலனுடன் சென்றுவிட்டாராம். இது தெரிந்த உடைந்து போன கனடா இளைஞர் அந்த பெண் மீது இப்போது நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கனடாவின் வின்னிபெக் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்பவர் தனது முன்னாள் காதலிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அதாவது இவர் 5 மில்லியன் கனடா டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 கோடி) லாட்டரியை ஜெயித்து இருக்கிறார். இருப்பினும், சில காரணங்களால் அவரால் அந்த பரிசுத் தொகையை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

லாட்டரி
இதனால் அவர் தனது காதலியை நம்பி லாட்டரியை கொடுத்து, பரிசுத் தொகையை வாங்கி வருமாறு சொல்லியுள்ளார். அந்த பெண்ணும் லாட்டரியுடன் சென்று பரிசுத் தொகையைப் பெற்றுள்ளார். ஆனால், அதன் பிறகு லாரன்ஸ் கண்டுகொள்ளாமல் அவர் தனது இன்னொரு பாய் பிரண்ட்டோடு கிளம்பிவிட்டாராம். இதைத் தெரிந்தே லாரன்ஸ் இப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதாவது கடந்த 2024ஆம் லாரன்ஸ் கேம்பல் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். ஆனால், அவரிடம் அப்போது சரியான அடையாள அட்டை எதுவும் இல்லையாம். இதனால் பரிசை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது லாட்டரி அதிகாரிகள் அளித்த ஆலோசனைப்படி தனது காதலியான கிரிஸ்டல் ஆன் மெக்கே என்பவரிடம் லாட்டரி சீட்டை கொடுத்து பரிசை வாங்கச் சொல்லியிருக்கிறார்.
காதலியை நம்பிய இளைஞர்
லாரன்ஸ் தனது காதலி மெக்கேவை முழுமையாக நம்பியிருக்கிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். அப்போது வரை இருவருக்கும் இடையே எந்தவொரு பெரிய சிக்கலும் எழுந்ததே இல்லை. இருவருக்கும் இடையே நல்ல ரிலேஷன்ஷிப் இருந்துள்ளது. மேலும், இருவரும் லிவ் இன் உறவிலும் வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே மெக்கேவிடம் பரிசை வாங்கச் சொல்லியிருக்கிறார்.
பொதுவாக லாட்டரி பரிசை செக்காகவே தருவார்கள். அதை நாம் தான் வங்கியில் போட்டு பணமாக எடுக்க வேண்டும். அப்போது லாரன்ஸிடம் வங்கிக் கணக்கும் இல்லாததால் மெக்கே வங்கிக் கணக்கிலேயே செக்கை போடச் சொல்லியிருக்கிறார் லாரன்ஸ். அதுவரை எல்லாம் நன்றாகவே இருந்துள்ளது. இருவரும் ஜோடியாகவே சென்று பரிசையும் வாங்கியுள்ளனர். அது தொடர்பான போட்டோவும் வீடியோவும் கூட அப்போது உள்ளூர் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகியுள்ளது.
எல்லாம் மாறிடுச்சு
ஆனால், அதன் பிறகு தான் எல்லாமே மாறியதாகப் புலம்புகிறார் லாரன்ஸ்.. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "சில நாட்களில் மெக்கே மாயமானார். நாங்கள் ஹோடலில் ரூம் எடுத்து தங்கியிருந்தோம். அவர் அங்கு வரவில்லை. என்னோடு இருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டார். கஷ்டப்பட்டு அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தேன். அப்போது நான் உடைந்து போய்விட்டேன்.
வழக்கு
அவர் பணத்தை வாங்கிய பிறகு அவரது காதலுடன் சென்றுவிட்டார். எனது மெசேஜ், கால் என எதற்கும் பதிலில்லை. சமூக வலைத்தளங்களிலும் பிளாக் செய்துவிட்டார். இதன் காரணமாகவே நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், காதலியிடம் லாட்டரி சீட்டை கொடுக்கச் சொன்ன லாட்டரி நிறுவனம் மீதும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications