For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரியங்கா, ராபர்ட் வதேராவை லண்டனில் சந்தித்தேன்: லலித்மோடி புது சர்ச்சை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, அவரது மகள் பிரியங்காவை தாம் லண்டனில் சந்தித்தாக ஊழல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் ஐ.பி.எல் தலைவர் லலித் மோடி டிவிட்டரில் கூறியுள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அவர்களை தாம் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Met Robert Vadra, Priyanka Gandhi in London: Lalit Modi

இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித் மோடி, அண்மையில் விசா முறைகேடுகளில் சிக்கி பல குற்றசாட்டுகளுக்கு உள்ளானார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இவருக்கு வெளிநாட்டுப் பயண ஆவணங்கள் கிடைப்பதற்கு உதவியதாக, பெரும் சர்ச்சை எழுந்தது. மேலும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் இவருக்கு உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆவணத்தில் கையெழுத்து

லலித் மோடி, இங்கிலாந்து குடியுரிமை கேட்டு கடந்த 2011ம் ஆண்டு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை ஏற்குமாறு வசுந்தரா ராஜே ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டதாக கூறி, அந்த ஆவணத்தை லலித் மோடியின் வக்கீல் மெக்மூத் அப்தி கடந்த வாரம் வெளியிட்டார். ஆனால், அதை வசுந்தரா ராஜே மறுத்தார். அதில் தனது கையெழுத்து இல்லை என்றும், அது போலி ஆவணம் என்றும் அவர் கூறினார். ஆயினும், அதை ஏற்காமல், வசுந்தரா ராஜே பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

கையெழுத்து போட்டது உண்மை

இந்நிலையில், ‘நண்பர் என்ற முறையில், லலித்மோடியின் கோரிக்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டேன்' என்று பாஜக மேலிடத்திடம் வசுந்தரா ராஜே ஒப்புக்கொண்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. கட்சி வட்டாரங்கள் கூறியதாக, இத்தகவலை ஒரு தனியார் ஆங்கில செய்தி சேனல் வெளியிட்டது. சுஷ்மா ஸ்வராஜூம், வசுந்தரா ராஜேவும் பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பிரியங்கா உடன் சந்திப்பு

இந்த நிலையில் சோனியா காந்தி குடும்பத்தை லண்டனில் சந்தித்ததாகவும், சோனியா மருமகன் ராபர்வதேராவையும். அவரது மனைவி பிரியங்காவையும், தான் சந்தித்ததாக, லலித் மோடி , தனது டிவிட்டரில் கூறியுள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அவர்களை தாம் சந்தித்ததாகவும் கூறியுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது

English summary
Former IPL commissioner Lalit Modi on Friday said in a series of tweets that he met Robert Vadra and Priyanka Gandhi in London when UPA was in power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X