For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடை வச்சிருக்கிறவங்களுக்கு 'பெட்ரமாக்ஸ்' கிடையாது... குண்டா இருந்தா 'கூல்டிரிங்ஸ்' கிடையாது!

Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ மக்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினையைக் கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டில் குளிர்பான விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது அந்நாட்டு அரசு.

உலகம் முழுவதும் உடல் பருமன் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் எனக் கூறலாம். அதிலும் குறிப்பாக அதிக உடல் உழைப்பற்ற வேலையைத் தேர்ந்தெடுக்கும் இளம் தலைமுறை, உடல் பருமனை உண்டாக்கும் உணவுகளையே விரும்பி உண்கின்றனர்.

இந்நிலையில், உடல் பருமன் மெக்சிகோ அரசிற்கு பெரும் பிரச்சினைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளது. எனவே, அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் முழுமூச்சாக இறங்கியுள்ளது மெக்சிகோ நாட்டு அரசு.

அதிக எடை கொண்டவர்கள்...

அதிக எடை கொண்டவர்கள்...

மெக்சிகோ மக்களில் பெரியவர்களில் 70 சதவிகிதத்தினரும், சிறியவர்களில் 30 சதவிகிதத்தினரும் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றனர் என சமீபத்திய அரசு கணக்கீடுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.

செலவு...

செலவு...

உடல் பருமனால் ஏற்படக்கூடும் நேரடியான அல்லது மறைமுகமான பிரச்சினைகளினால் பொது சுகாதார அமைப்பிற்கான செலவினங்கள் வரும் 2017-ம் ஆண்டில் 11. 7 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கக்கூடும் என்று அரசாங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குளிர்பான விற்பனை...

குளிர்பான விற்பனை...

மேலும், மெக்சிகோவில் குளிர்பானங்களின் விற்பனை தனி நபர் ஒருவரின் வருட நுகர்வோர் அளவு 163 லிட்டர் என்ற அளவில் அதிகமாகக் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. இது தவிர மெக்சிகன் உணவு வகைகளிள் பொறித்த உணவுகளே பிரதானமாக இருக்கின்றன.

நீரழிவு நோய்த்தாக்கம்...

நீரழிவு நோய்த்தாக்கம்...

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பில் ஒருங்கிணைந்து செயல்படும் 34 நாடுகளில் மெக்சிகோவில்தான் நீரிழிவு நோய்த்தாக்கம் அதிகமாக உள்ளதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளதும் அந்நாட்டு அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வரி....

வரி....

எனவே, பெருகிவரும் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் விதமாக உயர் கலோரி குளிர்பானங்கள் மற்றும் உணவுகள் மீதான வரி விதிப்பை மெக்சிகோ அரசு சென்ற வருடம் அதிகரித்தது. இந்நிலையில் தற்போது தொலைக்காட்சி விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் முடிவை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தடை...

தடை...

உடனடியாக நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவினால் வார நாட்களில் தினம் மதியம் 2.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையிலும், வார விடுமுறை தினங்களில் காலை 7 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் இத்தகைய விளம்பரங்கள் ஒலி, ஒளிபரப்பப்படுவது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

தியேட்டர்களிலும்...

தியேட்டர்களிலும்...

அதேபோல், திரையரங்குகளிலும் குளிர்பான விளம்பரங்கள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரங்கள் குறைப்பு...

விளம்பரங்கள் குறைப்பு...

மொத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய உணவு மற்றும் குளிர்பானங்கள் மீது வெளிவரும் விளம்பரங்களில் 40 சதவிகித விளம்பரங்கள் நிறுத்தப்படும் என மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Mexico said on Tuesday it will restrict TV ads for soft drinks, snacks and other high-calorie foods in a bid to tackle rampant obesity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X