AI + ரோபோ ஆயுதம்.. நொடியில் சரிந்த ஈரான் தலைவர்.. ஆனா கூடவே இருந்த மனைவிக்கு எதுவுமே ஆகல! அது எப்படி
டெல் அவிவ்: ஈரான் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இதில் ஈரான் கொஞ்சம் தடுமாறிவிட்டது என்பதே உண்மை. ஆனால் இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது இது முதல்முறை இல்லை. பல காலமாகவே இதுபோன்ற ரகசிய தாக்குதல்களை மொசாட் உதவியுடன் இஸ்ரேல் நடத்தியுள்ளது. அதில் முக்கியமானது கடந்த 2020ல் நடந்த மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை.. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பல ஆண்டுகளாக மொஹ்சென் ஃபக்ரிசாதே பெயர் ஈரான் அணு ஆராய்ச்சியில் அடிபட்டு வந்தது. ஆனால், அவரை பற்றிக் கூடுதல் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.. 2000களின் முற்பகுதியில் ஈரான் ஒரு அணு குண்டை உருவாக்கும் ரகசிய முயற்சியான "பிராஜக்ட் அமைத்" என்ற திட்டத்தின் மூளையாக அவர் இருந்ததாக மேற்குலக நாடுகளின் உளவுத்துறை கருதியது. இருப்பினும், அவரை பற்றி வேறு எந்த தகவல்களும் இல்லை. அவர் யார்.. எப்படி இருப்பார்.. எங்கு இருக்கிறார் என எதுவுமே தெரியாது.

மொஹ்சென் ஃபக்ரிசாதே
அவரது இருப்பு மிகவும் மர்மமானதாக இருந்ததால் தான் ஒபாமா காலத்தில் 2015ல் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான போது கூட, அவரது பெயரைக் குறிப்பிட முடியவில்லை. 2010களின் பிற்பகுதியில் இஸ்ரேல் அவரை நோட்டம் விட ஆரம்பித்தது. அவரை பற்றி உளவுத் தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தது. ஆண்டுகள் செல்ல செல்ல அவரை பற்றிய தகவல்கள் மொசாட் வசம் வந்தது.
இந்தச் சூழலில் தான் 2018ல் ஈரானின் அணுசக்தி ஆவணங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அம்பலப்படுத்தினார். அப்போது ஃபக்ரிசாதேயின் பெயரைக் குறிப்பிட்ட நெதன்யாகு, "அந்த பெயரை நினைவில் கொள்ளுங்கள்" என்று மட்டும் கூறினார். அதன் பிறகு இஸ்ரேல் உளவுத் துறையான மொசாட் தனது ஒட்டுமொத்த போக்கசையும் ஃபக்ரிசாதே பக்கம் திரும்பியது. இரண்டே ஆண்டுகளில் ஃபக்ரிசாதே கொல்லப்பட்டதாக அறிவிப்பு வருகிறது.
எப்படிக் கொல்லப்பட்டார்
இதில் ஃபக்ரிசாதே எப்படிக் கொல்லப்பட்டார் என்பதே மிக மிக முக்கியமானது. கடந்த 2020 நவம்பர் 27ம் தேதி மொஹ்சென் ஃபக்ரிசாதே தனது மனைவி மற்றும் பாதுகாவலர்கள் உடன் தெஹ்ரானுக்கு கிழக்கே அப்சார்ட் நகரில் உள்ள அவர்களின் இல்லத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வழக்கமான கான்வாய் பாதுகாப்பு எல்லாம் இருந்தது. அப்போது சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில், ஒரு டிரக் இருந்தது.
ஆனால், அதில் தான் இஸ்ரேல் உளவுத் துறை ஆயுதத்தை வைத்திருந்தது. உள்ளே 7.62 மிமீ FN MAG இயந்திரத் துப்பாக்கி, ஏஐ, செயற்கைக்கோள் வசதி மற்றும் வெடிபொருட்கள் என எல்லாமே அதில் இருந்தது. இருப்பினும், இஸ்ரேல் ஏஜெண்டுகள் யாரும் அங்கு இல்லை. ஈரானுக்கு வெளியே இருந்தபடி இஸ்ரேல் ஏஜெண்டுகள் அந்த ஆயுதங்களை இயக்கியுள்ளனர்.
ஏஐ+ துப்பாக்கி
சரியாக ஃபக்ரிசாதே கார் அருகே வந்தபோது, அங்கிருந்த ஸ்பீட் பிரேக்கர் ஒன்றில் கார் ஸ்லோ ஆனது. அப்போது அந்த டிரக்கில் இருந்து துப்பாக்கிச் சூடு ஆரம்பித்தது. முதல் ரவுண்டு துப்பாக்கிச் சூட்டில் ஃபக்ரிசாதே கார் டேமேஜ் ஆனது. அடுத்த ரவுண்டு துப்பாக்கிச் சூட்டில் ஃபக்ரிசாதே தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் வெளியே வந்து கார் கதவின் பின்னால் மறைந்து கொண்டார். இருப்பினும், மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில், அதில் மூன்று தோட்டாக்கள் அவரது முதுகெலும்பில் பாய்ந்தன. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒரு குண்டு கூட மனைவியை தாக்கல
மொத்தம் 15 தோட்டாக்கள் சுடப்பட்டன. இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனும் ஒரே நிமிடத்தில் நடந்து முடிந்தது. இதில் விஷயம் என்னவென்றால் பக்கத்திலேயே தான் அவரது மனைவி இருந்தார். ஆனால், ஃபேஷியல் ரெகக்னிஷன் சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டதால் அவர் மீது ஒரு குண்டு கூட பாயவில்லை. அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
ஃபக்ரிசாதே உயிரிழந்தது உறுதியான அடுத்த நொடி, அந்த டிரக் வெடித்துச் சிதறியது. ஆதாரங்களை முழுமையாக அழிக்க கார் வெடித்துச் சிதறும் வகையில் வடிவமைத்து இருந்தனர். ஆனால், அது மட்டும் கொஞ்சம் சொதப்பிவிட்டது. கார் வெடித்தாலும் உள்ளே இருந்த உபகரணங்கள் முழுமையாக அழியவில்லை. அதை ஈரான் எடுத்து சோதனை செய்தபோதே மொசாட்டின் இந்த ஆபரேஷன் வெளிச்சத்திற்கு வந்தது.
மொசாட்
அவரை கண்காணித்தது முதல் கொல்வது வரை ஒட்டுமொத்த ஆபரேஷனையும் மொசாட் தான் கண்காணித்துள்ளது. இதுவரை இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், முன்னாள் மொசாட் தலைவர் யோசி கோஹன், ஃபக்ரிசாதே இஸ்ரேலின் டார்கெட்டாகவே இருந்தார் எனச் சூசகமாக ஒப்புக்கொண்டிருந்தார்.
மொசாட் ஏஜெண்டுகள் ஃபக்ரிசாதேயை பல மாதங்கள் கண்காணித்து வந்தனர். மேலும், உபகரணங்கள் சிறிய சிறிய துண்டுகளாக ஈரானுக்குள் கடத்தி அங்கேயே ஒன்று சேர்த்துள்ளனர். அதன் பிறகே ஃபக்ரிசாதேயை காலி செய்துள்ளனர். ஆளே இல்லாமல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கடவுளின் கை இருந்ததாகவும் நெட்டிசன்கள் சிலர் குறிப்பிடுகிறார்கள். இது இஸ்ரேல் மற்றும் மொசாட்டின் திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே இருக்கிறது.
-
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications