நாடு கடத்தினால் விஜய் மல்லையாவை என்ன செய்வோம் தெரியுமா? இங்கிலாந்திடம், இந்தியா சொன்ன பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் ஆர்த்தூர் சாலையிலுள்ள மும்பை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என இங்கிலாந்து அரசிடம் இந்தியா தெரிவித்துள்ளது.

பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி ஏய்ப்பு செய்துவிட்டு இங்கிலாந்தில் பதுங்கியுள்ல மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வலியுறுத்தி இந்திய தரப்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Mumbai's Arthur Road jail for Mallya if extradited says India

இதனிடையே இந்தியாவுக்கு மல்லையாவை நாடு கடத்தினால் அவரை எங்கே அடைப்பீர்கள் என இங்கிலாந்து அரசு கேட்டதற்கு, மும்பை மத்திய சிறைச்சாலையில் அடைக்க உள்ளதாக இந்தியா பதிலளித்துள்ளது. இதுபோன்ற கேள்விகள், நாடு கடத்தலின் நடைமுறைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வழங்கியுள்ள ஆவணங்களில் இங்கிலாந்து அரசுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதாக வழக்கை கையாளும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இங்கிலாந்து அரசிடம் இந்தியா தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நிலுவையிலுள்ளதையும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vijay Mallya will be lodged in the Arthur Road jail if extradited to India, a UK court has been told. The Indian government was responding to questions from the UK government on where Mallya would be lodged if extradited to India.
Please Wait while comments are loading...