அதிர்ச்சி.. விரட்டி விரட்டி சுடப்படும் மக்கள்.. மியான்மரில் இப்படி ஒரு கொடூரமா? கலங்கடிக்கும் வீடியோ
மியான்மர்: மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள்.. அதிலும் சொந்த நாட்டு மக்கள் மீதே மியான்மரில் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியான மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவில் ஆங் சன் சுகியின் நேஷனல் லீக் ஆப் டெமாக்ரசி கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இந்த வெற்றிக்கு பின் ஆங் சன் சுகி பாராளுமன்றத்திற்கு மீண்டும் செல்லும் திட்டத்தில் இருந்தார்.
ஆனால் பாராளுமன்றம் தொடங்கும் முன் அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மியான்மர் ராணுவ தளபதி மின் ஆங் ஹலாய்ங் ஆட்சியை கைப்பற்றினார்.

எப்படி
மியான்மர் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டது. அங்கு வாக்கு பதிவு சரியாக நடக்கவில்லை என்று கூறி ஆட்சியை ராணுவம் கைப்பற்றிவிட்டது. ஆங் சன் சுகி கைது செய்யப்பட்டுவிட்டார். அதில் இருந்து ராணுவ ஆட்சிக்கு எதிரான மியான்மரில் போராடும் மக்கள், கேஎன்யூ போன்ற அமைப்புகள் மீது ராணுவம் கடுமையாக துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தி வருகிறது.

நேற்று முதல்நாள்
நேற்று முதல்நாள் மியான்மரில் முப்படை தினத்தில் ராணுவத்திற்கு எதிராக போராடிய 114 மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் . மக்கள் வெளியே வர கூடாது. வெளியே வந்தாலே துப்பாக்கி சூடுதான் . உயிரோடு இருக்க வேண்டும் என்றால் வீட்டுக்குள் இருங்கள் என்று ராணுவம் உத்தரவிட்டுவிட்டது. இதை எதிர்த்து போராடும் மக்கள்தான் சுடப்பட்டு வருகிறார்கள் .

நேற்று
இந்த நிலையில் நேற்று இந்த 114 மக்களின் மறைவுக்கு இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மியான்மரின் தெற்கு கிராமங்களில் இந்த இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால் அதிலும் கூட மியான்மர் ராணுவம் சிறிய ரக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. கிராமங்களை குறி வைத்து மோசமாக தாக்குதல்களை மியான்மர் ராணுவம் நடத்தியது.

இன்றும் மோசம்
இந்த தாக்குதலில் தப்பித்து வெளியே ஓடி வந்த மக்களை அங்கிருந்த ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 144 பேர் பலியாகினர்.மொத்தமாக 600க்கும் அதிகமானோர் இதுவரை பலியானார்கள். எந்த வகையிலும் தப்பிக்க முடியாது. கண்டிப்பாக சுடுவோம் என்று திட்டமிட்டு, மக்களை சுற்றிவளைத்து மியான்மர் ராணுவத்தினர் சுட்டனர். ஒரு இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு கூட இவ்வளவு மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Myanmar 🤐pic.twitter.com/NYyYtlGC0S
— Ranvijay Singh (@ranvijaylive) March 28, 2021
வீடியோ
அதோடு வெளியே பைக்கில் செல்லும் சாதாரண இளைஞர்கள் கூட ராணுவத்தால் விசாரணை இன்றி சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். ராணுவம் இப்படி மக்கள் மீது மூர்க்கமாக சுடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனால் மியான்மரில் உள்ள பல ஆயிரம் மக்கள் தாய்லாந்தில் தஞ்சம் புக தொடங்கி உள்ளனர்.

ரஷ்யா சீனா உதவி
மியான்மரில் நடக்கும் இந்த கொடுமைக்கு அமெரிக்க அதிபர் பிடன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் மியான்மர் ராணுவத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா , ரஷ்யா அரசுகள் எடுத்துள்ளது. ராணுவத்திற்கு சீனாவும், ரஷ்யாவும் உதவுவதாக புகார் வைக்கப்படுகிறது.