For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாறையா? ஏலியனா? – குழம்பித் தவிக்கும் விஞ்ஞானிகளும், "கூலாக" மறுக்கும் நாசாவும்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாசாவின் ரோவர் எடுத்து அனுப்பிய செவ்வாய்கிரக படத்தில் தெரியும் வேற்று கிரகவாசி முகங்கள் உண்மையா என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ள நிலையில் அதை மீண்டும் மறுத்துள்ளது நாசா.

பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

ஆய்வில் விஞ்ஞானிகள்:

ஆய்வில் விஞ்ஞானிகள்:

சமீபத்தில் அது அனுப்பிய புகைப்படம் ஒன்றில் வேற்று கிரகவாசியின் முகம் ஒன்று தெரிவதாக அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை ஆய்வு செய்து வரும் இணையதளம் ஒன்று தெரிவித்து உள்ளது.

தெளிவான முகங்கள்:

தெளிவான முகங்கள்:

இதன் ஆசிரியர் ஸ்காட் சி வாரிங் ரோவர் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் வேற்றுகிரக வாசிகளின் முகங்கள் தெரிவதாக கூறி உள்ளார்.

போஸ் கொடுக்கும் பெண்மணி:

போஸ் கொடுக்கும் பெண்மணி:

2008 ஆம் ஆண்டு கியூரியாசிட்டி அனுப்பிய ஒரு படத்தில் ஒரு பாறையின் மீது பெண் அமர்ந்திருப்பதைப் போல உள்ளது இந்தப் படம். அவர் கையை நீட்டிக் கொண்டு போஸ் தந்து கொண்டுள்ளார்.

சூடு பறக்கும் விவாதம்:

சூடு பறக்கும் விவாதம்:

அது உண்மையிலேயே மனித உருவமா அல்லது பாறையின் உருவமா என்று தெரியாமல் உலகம் குழம்பி வருகிறது. செவ்வாயில் ஜீவராசிகள் இருக்கலாம் என்றும் நம்பும் வானியல் ஆய்வாளர்களுக்கு இது நல்ல தீனி போட்டுள்ளது. அது பெண் தான் என இவர்கள் அடித்துப் பேச இல்லையில்லை அது பாறையின் உருவம் என்கின்றனர் சீரியஸ் விஞ்ஞானிகள்.

வெற்றுப் பாறைதான் அது:

வெற்றுப் பாறைதான் அது:

இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த தோற்றம், எலும்பு அல்ல, வெறும் பாறைதான் என்று நாசா விளக்கமளித்துள்ளது. காலமாற்றத்தால், பாறைகள் அரிக்கப்பட்டு, அவை புதைபடிவங்களாக கிடப்பதே, எலும்பு போன்று தோன்றுவதாக நாசா கூறியுள்ளது.

நுண்ணுயிரிகள் மட்டுமே:

நுண்ணுயிரிகள் மட்டுமே:

ஒருவேளை அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருந்தால் கூட, அவை நுண்ணுயிர் போன்ற சிறிய உயிர்களாகத்தான் இருந்திருக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
A startling discovery on Mars has once more raised the possibility of past alien life on the Red Planet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X