வாவ்... ஜூபிடரில் பயங்கர புயல்.. படத்தைப் பாருங்க.. அசந்து போயிருவீங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹூஸ்டன்(யு.எஸ்): நாசா மையம் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ஜூபிடர் (வியாழன்) கிரகத்தில் மிகப்பெரிய மேகமண்டலம் காணப்படுவதாகவும், பூமியில் வரும் புயலைப் போல் பன் மடங்கு பெரிய புயல் மையம் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் கோ எடுத்த ஜூபிடர் புகைப்படத்தையும், நாசா வசம் உள்ள பூமியின் புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து பார்த்தனர்.அதன் மூலம் ஜூபிடரில் காணப்படும் சிவப்புப் புள்ளி பற்றிய சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது.

Nasa releases new photos of Jupiter

அந்த சிவப்புப் புள்ளி பத்தாயிரம் மைல்கள் பரப்பளவு கொண்ட மேகக் கூட்டம் என்றும் பூமியை விட 1.3 மடங்கு பெரியது என்றும் தெரிய வந்துள்ளது. பூமியில் ஏற்படும் மிகப்பெரிய புயலை விட 10 மடங்கு தூரத்தை கடக்கக் கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது.

Nasa releases new photos of Jupiter

ஜூபிடர் ஆராய்ச்சிக்காக நாசா ஜூனோ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் 38 ஆராய்ச்சியாளர்களும் 28 முக்கிய பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். ஜூபிடர் சிவப்புப் புள்ளியை 1830ம் ஆண்டு முதலாகவே ஆராய்சியாளர்கள் கண்காணித்து வருவதாகவும், அது 350 ஆண்டுகளுக்கும் மேலானதாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மிகவும் அருகாமையில் துல்லியமான இந்த படங்கள் ஜூபிடர் ஆராய்ச்சியின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NASA has released new pictures of Jupiter in comparison with earth. It says the famous red spot of Jupiter is cloud spread over 10 thousand miles of storm.
Please Wait while comments are loading...