For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

70 நாள் படுத்தே இருக்கனும்.. மாசாமாசம் 5000 டாலர் கிடைக்கும்... ரெடியா...??

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாசாவில் ஒரு வேலை காத்திருக்கிறது.. ரொம்பக் கஷ்டமான வேலையெல்லாம் இல்லை.. தலைகீழாக படுத்திருக்கனும், 70 நாட்களுக்கு. இந்த வேலைக்கு மாதம் ஒன்றுக்கு 5000 டாலர் கட்டணமாக தருமாம் நாசா.

ஏன் இப்படி என்று கேட்கிறீர்களா... காரணம் இல்லாமலா இம்புட்டு காசு கொடுப்பாங்க.. பெரிய காரணம் இருக்கிறது.

அதாவது பெட் ரெஸ்ட் குறித்த ஆய்வை நடத்தவுள்ளது நாசா. அதற்காககத்தான் இப்படி ஆள் பிடிக்கிறார்களாம்.

பெட் ரெஸ்ட் ஆய்வு

பெட் ரெஸ்ட் ஆய்வு

படுக்கையில் எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்தால் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பது குறித்த ஆய்வை நடத்துகிறது நாசா. பெட் ரெஸ்ட் சர்வே இது.

70 நாட்கள் படுக்க வைத்து

70 நாட்கள் படுக்க வைத்து

இந்த ஆய்வுக்கு உட்பட விரும்புவோரை நாசா வரவேற்கிறது. இதற்காக தேர்வு செய்யப்படும் நபர்கள் 70 நாட்கள், தலைகீழாக படுத்திருக்க வேண்டும்.

விண்வெளி வீரர்களுக்காக

விண்வெளி வீரர்களுக்காக

விண்வெளி வீரர்கள், எடைக் குறைவான சூழலில் பணியாற்றிடும்போது அவர்களது செயல்பாடுகளை மேம்படுத்துவது எப்படி என்பதற்காக இந்த ஆய்வை மேற்கொள்கிறதாம் நாசா.

ஆர்பி்ட்டில் வைத்து சோதிப்பது கஷ்டம்

ஆர்பி்ட்டில் வைத்து சோதிப்பது கஷ்டம்

விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் அல்லது தங்கும் ஆர்பிட்டில் வைத்து பெரிய அளவில் சோதிக்க முடியாது என்பதால் அந்தச் சூழலை ஆய்வகத்திலேயே ஏற்படுத்தி அதில் ஆட்களை படுக்க வைத்து சோதனை செய்கிறதாம் நாசா.

தலைகீழாக படுக்க வேண்டும்

தலைகீழாக படுக்க வேண்டும்

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோரின் தலை கீழேயும், கால் மேலேயும் இருக்கும் வகையில் படுக்க வைக்கப்படுவார்கள். இப்படியே 70 நாட்கள் படுத்திருக்க வேண்டும். படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது. ரொம்ப அவசியம் இருந்தால் மட்டுமே அதுவும் கூட சோதனைக்காக மட்டுமே எழுந்திருக்கலாம்.

படுக்க வைத்து ஆய்வு

படுக்க வைத்து ஆய்வு

இப்படி படுக்க வைக்கப்பட்டிருப்பவர்களை நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து அவர்களை ஆய்வு செய்து வருவார்கள். எடை குறையும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்படும்.

3 வகையாக பிரித்து

3 வகையாக பிரித்து

இந்த ஆய்வை மொத்தம் 3 வகையாக பிரித்துள்ளனர். முதலில் படுக்கையில் படுத்திருப்பவர்கள் சில காலத்திற்கு உள்ளேயே நடமாட அனுமதிக்கப்படுவர். வழக்கமாக செயல்படலாம்.

அடுத்து பெட் ரெஸ்ட்

அடுத்து பெட் ரெஸ்ட்

அடுத்த கட்டம் பெட் ரெஸ்ட். இந்த கால கட்டத்தில் 70 நாட்கள் படுத்த நிலையிலேயே இருக்க வேண்டும்.

கடைசியாக ரெக்கவரி

கடைசியாக ரெக்கவரி

கடைசியாக ரெக்கவரி பீரியட். .. அதாவது கடைசி 14 நாட்கள் இந்த சோதனை நடைபெறும். இந்த சமயத்திலும் வழக்கம் போல எழுந்திருக்கலாம், நடமாடலாம்.

சோதனைகள்

சோதனைகள்

இந்த ஆய்வின்போது பங்கு பெறுபவர்களின் எலும்பு, தசை, இதயம், ரத்த ஓட்டம் ஆகியவை சோதனைக்குட்ப்படுத்தப்படும். நரம்பு மண்டல செயல்பாடும் கவனிக்கப்படும். அவர்களது ஊட்டச்சத்து நிலைமையும் ஆய்வுக்குட்படுத்தப்படும்.

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாம்...

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாம்...

இந்த ஆய்வில் ஈடுபடுவோர் சுத்தமான அமெரிக்கராக இருக்க வேண்டுமாம்.. அதாவது அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்...

இந்த ஆய்வில் ஈடுபட முன்வர விரும்புவோருக்கு ஆய்வுக்காலம் முழுவதும் மாதம் 5000 டாலர் என்று கட்டணமும் தரப்படுமாம்...

English summary
NASA's dream job offer to 'couch potatoes': Get 5000 dollars a month to stay in bed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X