For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 மாத பயணத்திற்குப் பின்... செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் நுழைந்தது நாசாவின் மேவன்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாசா அனுப்பிய மேவன் விண்கலம், கிட்டத்தட்ட 10 மாத பயணத்திற்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமையன்று செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் நுழைந்தது.

இந்த மேவன் விண்கலமானது, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆளில்லா விண்கலமாகும் இது.

NASA's MAVEN Enters Mars Orbit

செவ்வாய் கிரகத்தில் காலநிலை மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன, எப்படி குளிர் நிலை ஏற்படுகிறது, எப்படி வெப்ப நிலை ஏற்படுகிறது என்பதை மேவன் ஆராயவுள்ளது. மேலும், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து வெளிப்படும் வாயுக்கள் குறித்தும் இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.

கடந்த 10 மாதமாக, கிட்டத்தட்ட 711 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணித்து செவ்வாயின் சுற்று வட்டப் பாதைக்கு மேவன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி மேவன் விண்கலத்தை நாசா செலுத்தியது.

English summary
NASA's MAVEN spacecraft began orbiting Mars on Sunday, on a mission to study how the Red Planet's climate changed over time from warm and wet to cold and dry, the US space agency said. The unmanned orbiter has traveled more than 10 months and 442 million miles (711 million kilometers) to reach Mars for a first-of-its kind study of the planet's upper atmosphere.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X