For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 12 மடங்கு அதிகரிப்பு: முதலிடத்தில் முகேஷ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 12 மடங்கு அதிகரித்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண்மை இயக்குநர் கிறிஸ்டின் லகார்தே தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண்மை இயக்குநர் கிறிஸ்டின் லகார்தே கூறியதாவது

"இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, கடந்த 15 ஆண்டுகளில் 12 மடங்காக அதிகரித்துள்ளது என்றார்.

தனிநபர் வருமானம்

தனிநபர் வருமானம்

உலகின் பல நாடுகளில் தனி நபர் வருமானத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. அமெரிக்காவிலும் இது மிக அதிகமாக காணப்படுகிறது. அடுத்த 30 ஆண்டுகளில் உலக மக்கள்தொகையில் மேலும் 200 கோடி அதிகரிக்கும்.

மூத்த குடிமக்கள் அதிகம்

மூத்த குடிமக்கள் அதிகம்

2020-ம் ஆண்டில் 65 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

ஆப்பிரிக்கா, தெற்காசியா பகுதிகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஐரோப்பா, சீனா, ஜப்பான் பகுதிக ளில் வயதானவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள்.

சீனாவை முந்தும் இந்தியா

சீனாவை முந்தும் இந்தியா

இன்னும் 10 ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா முந்திவிடும். அதே போன்று அமெரிக்காவின் மக்கள் தொகையை நைஜீரியா முந்தி விடும். அதிக இளைஞர்களை கொண்ட நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வுகள், படைப்புத்திறன், புதுமைகளை புகுத்துவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால், இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தால்தான் இது சாத்தியமாகும்.

நவீன தொழில்நுட்பங்கள்

நவீன தொழில்நுட்பங்கள்

இணையதளம், நவீன தொழில்நுட்ப இயந்திரங்களின் வரவு போன்றவற்றால் வேலை வாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை முனைப்புடன் பயன்படுத்துவது தொடர்பாக உலக நாடுகள் சிந்திக்க வேண்டும்"

பணக்காரர்கள் பட்டியல்

பணக்காரர்கள் பட்டியல்

இந்தியாவின் கோடீஸ்வரர்களில் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பெற்றுள்ளார். இந்திய கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு கடந்த 15 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்ந்து உள்ளதாக கூறியுள்ள பன்னாட்டு நிதி நிறுவனம் இந்திய பணக்காரர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி, 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். லட்சுமி மிட்டல் 96 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து குவித்து 2வது இடத்தில் இருக்கிறார்.

ஆசிம் பிரேம்ஜி

ஆசிம் பிரேம்ஜி

துலீப் ஷங்வி 83,400 கோடி ரூபாய் சொத்து குவித்து 3வது இடத்திலும் உள்ளனர். இதேபோல், ஆசிம் பிரேம்ஜி 4வது இடத்திலும், பலோன்ஜி மிஸ்திரி 5வது இடத்திலும், இந்துஜா சகோதரர்கள் 6வது இடத்திலும், சிவ் நாடார் 7வது இடத்திலும் உள்ளனர்.

குமார் பிர்லா, சுனில் மிட்டல்

குமார் பிர்லா, சுனில் மிட்டல்

மேலும், அதி கோத்ராஜ் குடும்பத்தினர் 8வது இடத்திலும், குமார் பிர்லா 9வது இடத்திலும், சுனில் மிட்டல் குடும்பத்தினர் 10வது இடத்திலும் உள்ளனர்.

English summary
Tensions in the global economy risk creating "more frequent and more damaging" crises unless countries put global interests above national gain, Christine Lagarde has warned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X