For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்ப்போம்: இந்தியாவுக்கு நவாஸ் ஷரீப் அழைப்பு

By Siva
Google Oneindia Tamil News

Nawaz Sharif invites India for dialogue on Kashmir
இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் அழைப்பு விடுத்துள்ளார்.

பலகாலம் தீராமல் உள்ள காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசி ஒரு தீர்வு காண வருமாறு இந்தியாவை அழைக்கிறேன். காஷ்மீர் மக்களின் விருப்பப்படி இந்த பிரச்சனையை தீர்க்கும் வரை அப்பகுதியில் அவநம்பிக்கையும், பதட்டமும் இருந்து கொண்டே தான் இருக்கும். எனது அழைப்புக்கு இந்தியா நல்ல பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு இருபக்கமும் வாழும் மக்களின் பிரச்சனைகளை குறைக்க பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இது பாகிஸ்தான் அமைதியை, சமாதானத்தை விரும்புகிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது. காஷ்மீர் பிரச்சனை ஐ.நா.வின் முடிக்கப்படாமல் இருக்கும் விவகாரங்கள் பட்டியலில் உள்ளது என்றார்.

English summary
Prime Minister Nawaz Sharif invited India to engage in a “comprehensive, sustained and result-oriented” dialogue with Pakistan to resolve the Kashmir issue. “I invite India for a comprehensive, sustained and result-oriented” dialogue for the resolution of the Kashmir issue, Sharif said while addressing a joint session of Pakistan-occupied Kashmir’s assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X