For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1962ஆம் ஆண்டு சீனாவுடனான யுத்தத்தின் போது அமெரிக்காவின் உதவியை கோரி கடிதங்கள் அனுப்பிய நேரு'

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 1962ஆம் ஆண்டு சீனாவுடனான யுத்தத்தின் போது அமெரிக்கா அதிபர் ஜான் கென்னடியிடம் நாட்டின் பிரதமராக இருந்த நேரு உதவி கோரி கடிதங்கள் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் அதிகாரி புரூஸ் ரீடெல் "'JFK's Forgotten Crisis: Tibet, the CIA and the Sino-Indian War'" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

Nehru sought US assistance during 1962 Indo-China war
  • மூன்றாம் உலக நாடுகளின் தலைவராக நேரு உருவெடுப்பதை சகிக்க முடியாததால் சீனாவின் மாவோ 1962ஆம் ஆண்டு இந்தியாவுடன் யுத்தத்தை நிகழ்த்தினார்.
  • மாவோவின் பிரதான இலக்காக நேருதான் இருந்தார்.
  • ஆனால் போரில் இந்தியாவை தோற்கடித்ததன் மூலம் தனது எதிரிகளான ரஷ்ய அதிபர் குருசேவ், அமெரிக்கா அதிபர் கென்னடி ஆகியோருக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தார் மாவோ.
  • சீனாவுடனான போரில் இந்தியா தமது பிரதேசங்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
  • அப்போது போர் விமானங்களை அனுப்பி உதவுமாறு அமெரிக்கா அதிபர் கென்னடிக்கு நேரு கடிதம் அனுப்பியிருந்தார்.
  • அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மூலம் 1962ஆம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி மற்றொரு கடிதமும் கென்னடிக்கு அனுப்பி வைத்திருந்தார் நேரு.
  • அக்கடிதத்தில் சீனாவுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவும் இணைந்து போரிட வேண்டும் என்று நேரு அழைப்பு விடுத்திருந்தார்.
  • அதேபோல் இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரும் வெள்ளை மாளிகைக்கு இது தொடர்பாக தந்தி ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.
  • நேரு மொத்தம் 12 போர் விமானங்களை கோரியிருந்தார். மேலும் எங்களிடம் அதிநவீன ரேடார்கள் இல்லை. ஆகையால் அமெரிக்கா தமது நவீன ரேடார்களையும் போர் விமானங்களையும் வழங்க வேண்டும் எனவும் நேரு கோரிக்கை விடுத்திருந்தார்.
  • அத்துடன் அமெரிக்கா வழங்கும் போர் விமானங்களை நிச்சயம் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தமாட்டோம் எனவும் நேரு உறுதியளித்திருந்தார்.
  • இந்த போர் விமானங்களை இயக்குவதற்கு 10,000 ராணுவ வீரர்கள் தேவை எனவும் நேருவின் கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
  • இதேபோல் இங்கிலாந்து பிரதமருக்கும் நேரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
  • நேருவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா போர்க்களத்துக்கு வருவதற்கு முன்னரே சீனா யுத்த நிறுத்தத்தை அறிவித்துவிட்டது.
  • அதேபோல் இங்கிலாந்தும் கூட நேருவின் கோரிக்கையை ஏற்று போருக்கு வர தயாராக இருந்தது. இந்நிலையில் சீனாவின் யுத்த நிறுத்த அறிவிப்பு உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
  • ஏனெனில் அந்த யுத்தத்தில் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும் கைப்பற்றி கொல்கத்தாவை நோக்கி சீனா நகர்ந்து கொண்டிருந்த நிலையில் அந்த யுத்த நிறுத்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.
  • என பல்வேறு தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
  • 1962ஆம் ஆண்டு சீனாவுடனான யுத்தத்தின் போது அமெரிக்கா அதிபர் ஜான் கென்னடியிடம் நாட்டின் பிரதமராக இருந்த நேரு உதவி கோரி கடிதங்கள் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் அதிகாரி புரூஸ் ரீடெல் "'JFK's Forgotten Crisis: Tibet, the CIA and the Sino-Indian War'" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
English summary
Former Prime Minister Jawaharlal Nehru had sought American assistance and wrote to the then US President John F Kennedy to provide India fighter jets to stem the Chinese aggression during the 1962 Sino-India war, according to a new book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X