126 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி.. கின்னஸ் உலக சாதனை படைத்த இளம்பெண்!
126 மணிநேரம் இடைவிடாது நடனமாடி, நேபாள இளம்பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Recommended Video
காத்மாண்டு: நேபாளத்தில் தொடர்ந்து 126 மணி நேரம் நடனமாடி இளம்பெண் ஒருவர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
நேபாளத்தைச் சேர்ந்தவர் பண்டனா நேபாள் (18) என்ற இளம்பெண். நடனம் மீது தீராக் காதல் கொண்ட இவர், அதிலேயே ஏதாவது கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என முடிவு செய்தார்.

அதன்படி, தனி ஒருவராக தொடர்ந்து 126 மணி நேரங்கள் அவர் நடனமாடி உலக சாதனை புரிந்துள்ளார். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் வைத்து கடந்தாண்டு நவம்பர் மாதம் இச்சாதனையை அவர் செய்துள்ளார். இதற்கான அங்கீகார சான்றிதழை கின்னஸ் பிரதிநிதிகள் பண்டனாவிடம் தற்போது அளித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்பவர் கடந்த 2011ம் ஆண்டு 123 மணி நேரம் 15 நிமிடங்கள் நடனம் ஆடி உலக சாதனை புரிந்திருந்தார். தற்போது அவரது சாதனையை பண்டனா நேபாள் முறியடித்துள்ளார்.
பண்டனாவின் இந்த சாதனை குறித்து கேள்விப்பட்ட நேபாள் பிரதமர் ஷர்மா ஒலி, அவரை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து பரிசு தந்து, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நடனம் மட்டுமின்றி சமூகசேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர் பண்டனா. இவர் பண்டனா நேபாள் பவுண்டேசன் என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஏழைப் பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications