For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசிய விமானம் விழுந்த இடத்தில் 122 பொருட்களை படம் பிடித்த பிரான்ஸ் சாட்டிலைட்

By Siva
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசிய விமானம் மூழ்கியதாகக் கூறப்படும் இந்திய பெருங்கடல் பகுதியில் 1 மீட்டர் முதல் 23 மீட்டர் வரை நீளமுள்ள 122 பொருட்கள் மிதந்தது பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் படத்தில் தெரிய வந்துளளதாக மலேசியா அறிவித்துள்ளது.

239 பேருடன் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிய மலேசிய விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் 1 மீட்டர் முதல் 23 மீட்டர் வரை நீளமுள்ள 122 பொருட்கள் மிதந்தது பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் படத்தில் தெரிய வந்துளளதாக மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

'New lead' in Malaysia Airlines jet probe? French satellite images show 122 objects

மேலும் அந்த பொருட்கள் கடலில் மூழ்கிய விமானத்தினுடையதா என்பதை கூற முடியாது என்றார் அவர். அந்த புகைப்படம் கடந்த 23ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமானம் எங்கோ உள்ளது அதில் பயணித்த தங்களுடைய சொந்தங்கள் உயிரோடு உள்ளதாக சீனர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையே விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்து இந்த மர்மத்தை விலக்குவதாக ஆஸ்திரேலியா வாக்குறுதி அளித்துள்ளது.

English summary
Malaysia transport minister Hishamuddin Hussein told that 122 fresh objects have been spotted by a French satellite in the Indian ocean.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X