ஆபத்து காலத்தில்.. இந்தியாவுக்கு 'கை' கொடுக்கும் நியூசிலாந்து.. இந்திய மருத்துவர்களுக்கு பாராட்டு!
வெலிங்டன்: இந்தியாவுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து சுமார் 1 மில்லியன் நியூசிலாந்து டாலர்களை (சுமார் 7,20,365 அமெரிக்க டாலர்) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு கொடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை மீள முடியாத அளவுக்கு மிக கடுமையான அடியை கொடுத்துள்ளது.
இறப்புகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று மோசமாகி வரும் நிலைமையை சமாளிக்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

இந்தியா பரிதாபம்
இந்தியாவின் பரிதாபமான நிலையை கண்டு உலக நாடுகள் போட்டி, போட்டு உதவி செய்து வருகின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து என பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் நட்பு நாடான நியூசிலாந்தும் நமது நாட்டுக்கு கை கொடுப்பதாக அறிவித்த்துள்ளது.

நியூசிலாந்து உதவி
அதாவது இந்தியாவுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து சுமார் 1 மில்லியன் நியூசிலாந்து டாலர்களை ((சுமார் 7,20,365 அமெரிக்க டாலர்) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு கொடுத்துள்ளது. இது தொடர்பாக நியூசிலாந்து வெளியுறவு மந்திரி நானாயா மஹுதா கூறியதாவது:- நாங்கள் இந்திய மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். இந்த கடினமான நேரத்தில் இந்திய அரசு மற்றும் உயிர்களை காப்பாற்ற கடுமையாக போராடும் இந்தியாவின் முன்னணி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் அயராத உழைப்புகளை பாராட்டுகிறோம்.

நடைமுறை உதவி
தற்போதையை கொரோனா தொற்றை சமாளிக்கும் விதமாக இந்தியாவுக்கு உதவுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி கொடுத்துள்ளோம்;; என்று வெளியுறவு மந்திரி நானாயா மஹுதா தெரிவித்தார். உதவி செய்வதற்கான நற்பெயரைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்புக்கு( சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்) நாங்கள் செய்த பங்களிப்பு மூலம் இந்தியாவுக்கு செய்யக்கூடிய மிகவும் நடைமுறை உதவி என்று நாங்கள் நம்புகிறோம்.

சர்வதேச செஞ்சிலுவை சங்க பணிகள்
இந்தியாவின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து இந்திய அரசு உதவ எப்போதும் தயாராக இருப்போம் என்று நானாயா மஹுதா கூறினார். இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ பொருட்களை வழங்க சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐ.எஃப்.ஆர்.சி) இந்திய செஞ்சிலுவை சங்கத்துடன் நேரடியாக இணைந்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications